கிறிஸ்துவின் முத்திரை The Seal Of The Christ 55-03-12 1.மாலை வணக்கம் நண்பர்களே. அது சரியான நேரத்தில் இங்கு வருகிறதல்லவா? இன்றிரவு நான் தவறான இடத்தில் திரும்பி விட்டேன்; நான் கட்டிடத்தைச் சுற்றி, மறுபுறம் சுற்றி வந்தேன். மேலும் நான் திரும்ப வருவதற்கு ஒரு கடினமான நேரத்தை கொண்டிருந்தேன். நான் வாசலில் நுழைந்த உடனே, அவர்கள் “நம்பிடுவாய்” பாடுவதைக் கேட்டேன். நான் “ஓ, என்னே” என்று நினைத்தேன். எனவே இன்றிரவு நாங்கள் ஒரு சிறு பந்தயத்தை வைத்தோம். நேற்றிரவு நான் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் “இப்போது, சகோதரன் மூர் (Moore) அவர்களே, இன்றிரவு மீண்டுமாக அரை மணி நேரம் நான் அங்கு காத்திருக்க வேண்டியிருந்தால், நீர் அடுத்த வாரம் திங்கள் இரவு, செவ்வாய் இரவு, மற்றும் புதன் இரவு பிரசங்கிக்கப் போகிறீர்” என்று கூறினேன். "நான் அங்கு சரியான நேரத்தில் இருக்கப் போகிறேன்” என்று நான் கூறினேன். அதன் காரணமாகத்தான் அவர் சரியான நேரத்திற்கு வந்தார். ஹா! ஹா! ஹா!. ஆமாம் ஐயா. (சகோதரன் மூர் சொல்கிறார், “அதற்காக இன்னும் மூன்று நாட்கள் உங்களை பிரசங்கிக்க வைக்கப் போகிறோம்” ஆசி.] ஹா! ஹா! ஹா!. சரி, ஆயினும் நான் சரியான நேரத்தில் இங்கு வந்து விட்டேன்; நீங்கள் இப்போதுதான் எழுந்து நின்றீர்கள் அல்லவா? நான்... என்னால் இங்கிருந்து பேசும்படியாக, இந்த நபர் என் கழுத்தில் இந்த கொக்கியை, அது என்னவாயிருப்பினும், மாட்டவேண்டியிருந்தது. நான் ஒலிபெருக்கியிலிருந்து (Microphone) சற்றே விலகிச் செல்ல இயலும் என்று நினைக்கிறேன். 2. யாவரும் நன்றாக இருப்பதாக உணர்கிறீர்களா? ஓ, அது அருமையாய் இருக்கிறது; அது சற்றே நன்றாயிருக்கிறது. நல்லது, நம்மால் முடியும் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறோம்... இப்போது நாம் தேன் குடுவைக்குள் நம் கைகளை இட்டு, தேவனுடைய தேனாகிய அவருடைய வார்த்தையை உண்ணப்போகிறோம். நான் இதுவரை கண்ட அழகான காட்சிகளில் ஒன்று; நான் எப்போதாவது உங்களிடம் கூறியிருக்கிறேனா என்று எனக்குத் தெரியாது. நான் நான் மீன்பிடிப்பதை விரும்புகிறேன், மேலும் அங்கே ஒரு... நான் நன்னீர் மீன் (brook trout) வகைகளின் வாழுமிடமான வடக்கு நியூ ஹாம்ப்ஷயரில் (New Hampshire) இருந்தேன். நான் மூன்று நாட்களாக என்னுடைய முதுகில் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு காட்டில் இருந்தேன். உங்களுக்குத் தெரியுமா, சில காலத்திற்குமுன், நான் அனுபவமற்றவர் (Tenderfoot) செல்லமுடியாத உயரமான மலைகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை நான் அங்கே ஒரு சிறிய கூடாரத்தை அமைத்திருந்தேன். மேலும் நான் நான் அதிகாலையில் எழுந்து புதர்களினூடாக சென்று, குட்டையில் சரியாக எறிந்து நன்னீர் மீன்களைப் பிடிக்கும்படி, நான் வைத்திருந்த ஒரு சிறு சில புதர்களை வெட்டிக் கொண்டிருந்தேன். ஆகவே நான் அதை முடித்து திரும்புவதற்கு எனக்கு ஏறக்குறைய எட்டு மணி ஆனது... கைக்கோடரியால், சூரியன் நன்றாக பிரகாசித்திருந்தது. மேலும் நான் எனது கூடாரத்திற்குத் திரும்பியபோது, அது தரைமட்டமாய் கிடந்தது. ஒரு தாய் கரடியும், இரண்டு கரடிக்குட்டிகளும் அங்கே நுழைந்து, அவை முற்றிலுமாக அதைக் கிழித்து எறிந்திருந்தன. நான் கூறுவது என்னவென்றால் அது ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரை சிதறுண்டிருந்தது. 3. நல்லது, அங்கே எங்கேயோ ஓரிடத்தில் நான் வைத்திருந்த ஒரு பழைய சேதமடைந்த துருப்பிடித்த துப்பாக்கி கிடந்தது, ஆனால்... கரடி எதை சாப்பிடுகிறது என்பதல்ல; அது எதையெல்லாம் நாசம்செய்கிறது என்பது தான் காரியம். அது ஒரு அடுப்புக்குழாயை கீழே தள்ளி விட்டு, உங்களுக்குத் தெரியுமா, வெறுமனே கடகட வென்று (rattle) சத்தம் கேட்பதற்காக அதன் மீது குதித்தது, கரடி மிகவும் மோசமான ஒன்று. நான் வந்தபோது, தாய் கரடி, உடனடியாக என்னை மோப்பம் பிடித்து, அது அப்பால் சென்றுவிட்டது. அது இந்தக் குட்டிகளுக்காக மென்மையான ஒலியை எழுப்பியது; ஒரு கரடிக்குட்டி அதனுடன் ஓடினது. மேலும் அது வெளியே சென்றது, ஆனால் மற்றொரு கரடிக் குட்டியோ அங்கேயே தரித்திருந்தது. அது என் பக்கம் முதுகைத் திருப்பிய வண்ணமாக இருந்தது. சரி, “அந்த கரடிக்குட்டிக்கு என்ன ஆனது, அது ஏன் போகவில்லை” என்று நான் வியந்தேன். மேலும் அந்த தாய் கரடி அங்கே காட்டிலே (பாருங்கள்?), குன்றின் பக்கவாட்டில் நின்று மெல்லிய ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. அது அந்தக் குட்டியை வரவழைத்துக் கொண்டிருந்ததை குறித்து நான் வியந்தேன். உங்களுக்குத் தெரியுமா அது வராமல், இப்படியாக தன் தலை குனிந்தவாறு அமர்ந்திருந்தது. “சரி, கரடிக்குட்டிக்கு என்ன ஆயிற்று” என நான் வியந்தேன். ஆகவே நான் கொஞ்சம் அருகே நடந்து சென்றேன். நான் மிக அருகில் நெருங்க விரும்பவில்லை, ஏனெனில், அது உங்களை பிறாண்டி விடும். ஆகவே அது... நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அது தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டே இருந்தது, பின்னர் மேலெழும்பி மெல்லிய ஒலியை எழுப்பினது. அந்த கரடியைக் கொன்றுவிட்டு இரண்டையும் அனாதைகளாக காட்டில் விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை. ஆகவே நான் நான் அதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அங்கே மிக அருகில் ஒரு மரம் இருந்தது, ஆனால் என்னைக்காட்டிலும் அந்த கரடியால் நன்றாக ஏற முடியும், ஆகையினால்... நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை நான் அறிந்திருந்தேன், மேலும் இந்த கரடிக்குட்டி என்ன செய்கிறது என்று நான் வியந்தேன். நான் அதை பக்கவாட்டில் பார்க்கும்படியாக, நான் பக்கத்தில் சுற்றி வந்த போது, ஆஹா... 4. உங்களில் எத்தனை பேருக்கு பணியாரம் மற்றும் வெல்லப்பாகு என்றால் விருப்பம்? ஓ, நான் உங்களிடம் கூறுகிறேன், அது சற்றே...எனக்கு அவைகளை நன்றாக செய்யத் தெரியாது, ஆனால் நான் நிச்சயமாக அவைகளை விரும்புகிறேன். ஆகவே நான் ஒரு வாளியளவு தேனை வைத்திருந்தேன். உங்களுக்குத் தெரியுமா, ஒரு வகையில் அது பாப்டிஸ்டுகளை இணங்க வைத்திருக்கிறது, உங்களுக்குத் தெரியுமா, ஏனெனில்... எனவே நான் அங்கு தேனை, ஒரு வாளியளவு தேனை வைத்திருந்தேன். நான் வழக்கமாக ஒரு பெரிய வாளியளவு எடுத்துக்கொள்வேன். ஏனென்றால் தெளிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை; நான் முழுவதுமாக அவைகளுக்கு முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நான் அதை நன்றாகவும் அதிக அளவும் ஊற்றுவேன். உங்களுக்குத் தெரியுமா, அவ்விதமாய் நான் அந்த தேனை பணியாரத்தின் மேல் ஊற்றுவேன். இந்த கரடிக்குட்டி அங்கு உள்ளே வந்தது, அவைகள் இனிப்பு பண்டங்களை எப்படியானாலும் விரும்பும். மேலும் அது அந்த வாளியின் மூடியை எடுத்தது. அது அங்கே உட்கார்ந்து கொண்டு, அதை இப்படியாக அதின் மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு, அது தன்னுடைய சிறிய பாதத்தை உள்ளே இட்டு, தேனை எடுத்து, இதைப் போன்று நக்கினது. அது... அது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை முழுவதும் தேனாகயிருந்தது. சற்றே, அது என்னை பார்க்க முயற்சித்தது, அதனது சிறிய கண்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டன, உங்களுக்குத் தெரியுமா, அது தனது கண்களைத் திறக்க முயன்று, இப்படியாக என்னை பார்த்தது. நான் “என்னே” என நினைத்தேன். அது சற்றும் கவலையின்றி, “சரி, உனக்கு கொஞ்சம் வேண்டுமா?” என்றவாறு என்னைப் பார்த்தது. அவ்விதமாய் அதன் பாதத்தை உள்ளேவிட்டு மீண்டுமாக நனைக்கத் தொடங்கியது. 5. நான் நினைத்தேன், "நல்லது, அது நாம் கொண்டிருக்கிற பழங்காலத்திய பெந்தெகொஸ்தே யூபிலி போன்றே இல்லாதிருந்தால், நான் அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதே இல்லை.” அது சரிதான். முழுவதுமாக தேன், உங்களுடைய உச்சந்தலையிலிருந்து எல்லா இடங்களிலும் முழுவதுமாக, நீங்கள் தேனால் மூடப்பட்டிருக்கிறீர்கள். அது சரி. கை தேன் ஜாடியில் இருக்கிறது. அது உண்மை. அதில் விசித்திரமான காரியம் என்னவென்றால், முழுவதும் நக்கித் துடைத்த பிறகு, இறுதியாக அது வாளியை கீழே போட்டது. நல்லது, அந்த கரடிக்குட்டி தாயிடமும் மற்ற கரடிக்குட்டியிடமும் போனது, அவைகள் அந்த கரடிக்குட்டியை நக்கி, அதின் மேலிருந்த தேனை எடுத்தன. நாம் பெற்ற கர்த்தரின் ஆசீர்வாதங்களில் சிலவற்றை அனுபவிக்க எல்லோரும் முயற்சி செய்து, நக்க விரும்பும் அளவிற்கு நாம் தேனைப் பெற்றுக்கொள்வோம் என்று நான் சற்றே நம்புகிறேன், இல்லையா? 6. இப்போது, நாம் ஒரு பழங்காலத்திய மகிழ்ச்சியான கூட்டத்தை நேசிக்கிறோம், இல்லையா? அங்கே நாம்... ஆனால் நீ அதை உணர்ந்து மகிழும் முன், உனக்குத் தெரியுமா, நீ உன்னை சரிசெய்து கொள்ளவேண்டும், நீ சரியான பாதையில் செல்ல வேண்டும். நேற்றிரவு நாம் “அந்திக்கிறிஸ்துவின் அடையாளம்” (Mark Of The Antichrist) குறித்து பேசிக்கொண்டிருந்தோம், மேலும் இன்றிரவு “கிறிஸ்துவின் அடையாளம்” (Mark Of Christ), அந்திக்கிறிஸ்துவின் முத்திரை (Seal) அல்லது கிறிஸ்துவின் முத்திரை (Seal). (தமிழ் வேதாகமத்தில் Mark என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அடையாளம் மற்றும் முத்திரை என்னும் இரண்டு வார்த்தைகளும் உள்ளது தமிழாக்கியோன்) இப்போது, நீங்கள் எல்லோரும் நன்றாக உணர்கிறீர்கள் என்று நம்புகிறேன். நாளை காலை ஆராதனைகளை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இங்கே பார்வையாளர்களாக இருப்பீர்களானால், ஏதாவது ஒரு சபைக்குச் செல்லுங்கள். தேசத்தின் பல்வேறு பகுதிகளைச் சுற்றி பல எழுப்புதல்கள் நடந்து வருகின்றன. எனவே நீங்கள் உங்களுடைய ஏதோ ஒரு நல்ல முழு சுவிசேஷ சபையை, ஏதோ ஒரு நல்ல ஆவிக்குரிய சபையை, கண்டுபிடித்து காலையில் சபைக்குச் செல்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதன்பின் நாளை பிற்பகல் மற்ற வேறு எந்த ஒரு கூட்டமும் நடைபெறாதபோது, நமக்கு நம்முடைய கூட்டங்கள் இருக்கும். 7. ஊழியக்காரர்கள் மற்றும் சபையோர்களே, இது கிறிஸ்தவ வர்த்தக புருஷர்கள் செய்த அருமையான ஒன்று என்று நான் நினைக்கிறேன். இல்லையா? அவர்கள் உங்களுடைய வழக்கமான சபை கூட்டங்களில் குறுக்கிடாததை நான் பாராட்டுகிறேன். எனவே நாளை பிற்பகல் அனைவரும் வருவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நாளை பிற்பகல் சுகமளிக்கும் ஆராதனையும் இருக்கும். பிணியாளிகளுக்காக ஜெபம் செய்யப் போகிறோம். கர்த்தருக்குச் சித்தமானால் நாளை பிற்பகல் சுமார் ஒன்றரை மணிக்கு என நினைக்கிறேன், ஜெப அட்டைகள் வழங்கப்படும், ஒரு மணி அல்லது ஒன்றரை மணிக்கு. எனவே இது பிற்பகலின் மீதமுள்ள மற்ற எல்லா காரியங்களிலிருந்து அது விலகி இருக்கும். பின்னர் நான் வந்து, கர்த்தருக்குச் சித்தமானால், நாளை பிற்பகல் சிறிது நேரம் பேச விரும்புகிறேன். பின்னர் ஜெப வரிசையை ஏற்படுத்தி, பிணியாளிகளுக்காக ஜெபம் செய்வோம். 8. இப்பொழுது, ஜீவனுள்ள தேவனுடைய இந்த அற்புதமான வார்த்தையை நாம் திறப்பதற்கு முன், ஒவ்வொரு மார்க்கமும், ஒவ்வொரு உண்மையான மார்க்கமும் இதன் மீது ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என நான் விசுவாசிக்கிறேன். மேலும் இப்படியாகயிருக்கும் பட்சத்தில், மார்க்கமானது இதைப் பற்றி பேசவில்லை யெனில், அந்த மார்க்கம் சரியானதல்ல. இதுவே தேவனின் ஒரே அஸ்திபாரம். நாம் ஏற்றுக்கொள்ளகூடிய ஒரே சத்தியம்... இந்த வார்த்தைக்கு முரணாக ஏதாவது இருக்குமாயின், அது சத்தியம் அல்ல. பழைய வேதாகமத்தில் அவர்கள் ஒரு செய்தியை அறிய மூன்று வழிகள் உண்டாயிருந்தன: முதலாவது நியாயப்பிரமாணத்தின் மூலமாய், அடுத்ததாக தீர்க்கதரிசிகள் அல்லது சொப்பனக்காரன் மூலமாய் அறிந்துகொண்டனர். அவர்கள் ஒரு சொப்பனத்தைக் காணும் போது அல்லது தீர்க்கதரிசனம் உரைக்கும் போது... ஆரோனின் மார்பில் ஊரீம் தும்மீம் என்று அழைக்கப் பட்டவைகள் வைக்கப்பட்ட மார்ப்பதக்கம் இருந்தது. ஒருவேளை போதகர்களுக்கு அது புரியும்; நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும் அதன்பின், ஒரு தீர்க்கதரிசி, தீர்க்கதரிசனம் உரைத்து அந்த ஊரீம் தும்மீமில் ஒளி ஒளிரவில்லை என்றால், அது தவறானது. ஒரு சொப்பனக்காரன் ஒரு சொப்பனத்தை உ ரைத்து, அது அந்த ஊரீம் தும்மீமில் ஒளிரவில்லை என்றால், அது தவறானதாகும். இப்போது, பிசாசு அதன் மாதிரியை (pattern) எடுத்து, அந்த பளிங்கு பந்துகளில் ஒன்றை உருவாக்கினான். ஆனால் தேவனிடம் இன்னும் அவரது ஊரீம் தும்மீம் உள்ளது, அது இது தான். அது சரியே. இதற்கு முரணாக, எந்த ஒரு பிரசங்கி பிரசங்கித்தாலோ, எந்த ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தாலோ, அல்லது எந்த ஒரு சொப்பனக்காரன் ஒரு சொப்பனத்தை கண்டாலோ, அது தவறாகும். அது சரி. அது வார்த்தை யிலிருந்துதான் வர வேண்டும். நான் வார்த்தையில் மிகுந்த விசுவாசத்தைக் கொண்டவன். அதுதான் நம்மை செவ்வையாக இருக்கும்படி செய்கிறது. தேவனுடைய வார்த்தைக்குத் திரும்ப வாருங்கள். 9. இப்போது, நாம் பக்கங்களை இப்படியாக திருப்ப முடியும், ஆனால் ஒரே ஒருவர் மாத்திரமே அந்த புஸ்தகத்தைத் திறக்க முடியும், அவர்தான் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பவரின் வலது கரத்திலிருந்து எடுத்தவரும், உலகத் தோற்றதிற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரும், வார்த்தையின் ஆக்கியோனுமாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவேயன்றி வேறு ஒருவரும் இல்லை. அவருடன் பேசுவதற்காக நாம் இப்போது சற்றுநேரம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. எங்கள் பரலோக பிதாவே, இன்றிரவு இங்கே வார்த்தையில் களிகூர வந்திருக்கும், இங்கு கூடியிருக்கும் இந்த மகிழ்ச்சிமிக்க ஒரு கூட்ட ஜனங்களுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் ஒரு நோக்கத்திற்காக வந்துள்ளோம்: அது ராஜாதி ராஜாவாகிய, கர்த்தருடைய ராஜ்யத்தில், ஒரேவிதமான காரியங்களைக் கொண்டவர்களாய், அதே ராஜ்யத்தின் குடிமக்கள் என்பதை அறிந்தவர்களாய், தேவனுடைய வார்த்தையில் ஐக்கியம் கொள்வதுதான். மேலும் இன்றிரவு நாங்கள் வார்த்தையில் ஐக்கியம் கொள்ள வந்திருக்கிறோம். இப்போது, பரிசுத்த ஆவியானவர்தாமே வந்து, வேத புஸ்தகத்திலிருந்து வார்த்தையை எடுத்து, ஜனங்களுக்கும், பிரசங்கிக்கும், நம்முடைய தேவைக்கேற்றாற்போல் கொடுப்பாராக, பிதாவே, ஒவ்வொரு மனிதனும் இன்றிரவு இங்கே இருந்தது நல்லது என்ற உணர்வுடன் திரும்பிச் செல்ல, சத்தியத்தை சரியாகப் பகிர்ந்து, அதை வழங்குவீராக. அவருடைய பிரசன்னத்தின் நிமித்தமாக, இதை அருளும், கர்த்தாவே. 10. அன்புள்ள தேவனே, இன்றிரவு இழந்து போனவர்களை இரட்சியும். நேற்று மாலை பாவிகளாகிய அவர்கள் பிரகாரத்தினூடாக அழுதுகொண்டே பிரசங்க பீடத்தை சூழ்ந்து, சிவந்த கண்களோடு, இங்கு இருந்ததை கண்டதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்: வாலிபர்கள், இளம் பெண்கள், முதியவர்கள், நடுத்தர வயதுள்ளவர்கள், சிறு பிள்ளைகள், சிங்காசனத்தைச் சூழ்ந்து, நீர் அவர்களுக்குக் கொடுத்த இரட்சிப்புக்காக நன்றி செலுத்த வந்தனர். நேற்றிரவு நீர் அவர்களுடைய இருதயத்தில் அற்புதமாகப் பேசினீர். ஏற்கெனவே விசுவாசிகளாக இருந்தவர்களில் அநேகர் ஆவியினால் நிரப்பப்பட வந்தனர். நிச்சயமாக, பிதாவே நீர் வருகிற ஒவ்வொருவருக்கும் அதை அருளினீர். இப்போது, கர்த்தாவே, இன்றிரவு பிணியாளிகள் முன்னதாகவே ஒருங்கே கூடிவரத் துவங்குவதை பார்க்கையில், பிணியாளிகளை நீர் சொஸ்தமாக்க நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கே சுவிசேஷம் பிரசங்கிக்கப் படுகிறதோ, அடையாளங்களும் அதிசயங்களும் அதனுடன் சேர்ந்து செல்ல வேண்டும். பிணியாளிகள் ஒருங்கே கூடிவருவதைப் பார்க்கிறோம்; அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் சொஸ்தமாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். அவர்கள் சொஸ்தமாக்கப்படுதலுக்காக ஜெபித்துக் கொள்ளப்பட, நாளை திரும்பி வர வேண்டியதில்லை, மாறாக அவர்கள் தேவனின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க சொஸ்தமாகி திரும்பி வருவார்களாக. ஒவ்வொருவரும் இப்போது ஆவியானவருக்கு தங்களை ஒப்புக்கொடுப்பார்களாக. பிதாவே, வார்த்தை பிரசங்கிக்கப்படுவதற்காக இன்றிரவு பரிசுத்த ஆவியானவருக்கு என்னை ஒப்புக் கொடுக்கும்படியாக, உமது ஆதாயமில்லாத ஊழியக்காரனை எடுத்துக்கொள்ளும், பிதாவே, அதை எங்களுக்கு திறந்தருளும், நாங்கள் இயேசுவின் நாமத்தில் அதை கேட்கிறோம். ஆமென். 11. நேற்று மாலை மிருகத்தின் அடையாளத்தை (Marking of the beast) (தமிழ் வேதாகமத்தில் Mark என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அடையாளம் மற்றும் முத்திரை என்னும் இரண்டு வார்த்தைகளும் உள்ளது தமிழாக்கியோன்) குறித்துப் பேசுகையில் அல்லது நாம் அதை அழைப்பதுபோல், மிருகத்தின் முத்திரை (Seal of the beast), ஏனென்றால் அது தேவனின் முத்திரை (Seal of God) என்று அழைக்கப்படுகிறது. மிருகத்தின் முத்திரை என்ன என்பதை நாம் கண்டோம்... முத்திரை ஒரு முடிவுற்ற காரியத்தைக் குறிக்கிறது. முடிவுற்ற எதுவும் முத்திரைப் போடப்பட்டதாகும். சரக்கு வாகனமானது, சரக்குகள் ஏற்றப்பட்டு, முழுவதும் ஏற்றப்பட்டு இருக்கும் நிலையில், முதலில் ஆய்வாளர் (Inspector) வர வேண்டும். மரப்பலகைகளோ (lumber) அல்லது எதுவாயிருப்பினும் சரக்கு வாகனத்தில் ஏற்றும்போது, ஆய்வாளர் வந்து அதை முழுவதும் ஆய்வு செய்வார். மேலும் சரக்கு ஏற்றுகின்ற புறத்தடத்தில் அவ்வாகனம் கொண்டுவரப்படுகையில், ஆய்வாளர்எல்லாவற்றையும் குலுக்கி அது நன்றாகவும் உறுதியாகவும் இருக்கிறதா என்று பார்ப்பார். அதன்பின் எல்லாம் உறுதியாக இருப்பதைக் கண்டறிந்த பிறகு, அவர் கதவை இழுத்து அடைத்து முத்திரையிடுகிறார். அது தன் பயண இலக்குக்கு முத்திரையிடப்படுகின்றது. அவ்விதமாகவே பரிசுத்த ஆவியானவர் நமக்குச் செய்கிறார்: நம்மிடம் வந்து, சபையில் தளர்வாக இருக்கும், தனிநபரில் தளர்வாக இருக்கும் சில காரியங்களை அசைக்கிறார். கொஞ்சம் பொறுப்பற்ற ஜீவியம், நாம் செய்யக்கூடாத காரியங்கள் மற்றும் நம்மிடம் தவறாக இருக்கும் சிறிய காரியங்களை, தேவன் வந்து அவைகளை அசைக்கிறார்: முதலில் நீங்கள் வார்த்தையில் உறுதியாக இருக்கிறீர்களா, நீங்கள் முன்னேறிச் செல்ல தேவனுடைய புத்திரராக அல்லது ஊழியக்காரராக இருக்க தகுதி உள்ளவரா என்பதைக் காண்கிறார். அவர் எல்லாம் உறுதியாக இருக்கிறது என்று கண்டறிந்ததும், கதவுகள் மூடப்பட்டு நீங்கள் முத்திரையிடப்படுகிறீர்கள். 12. சுவிசேஷத்தை அவிசுவாசிக்கும்படி இறுதியாக பிசாசு ஒவ்வொருவரையும் ஏவின போது... இறுதியாக, ஒரு நாள் தேவன் சத்தியத்தின் அறிவை அவனுக்கு முன்வைத்த பிறகு, அவன் கடைசி முறையாக அதற்கு முதுகைத் திருப்பி, "இல்லை, நான் என்னுடையதை வைத்துக்கொள்கிறேன்” என்று சொன்னால், பிசாசு அவனை கதவின் அருகே அழைத்துச்சென்று, பழைய ஏற்பாட்டின் மாதிரியின்படி, அவன் காதில் ஒரு துளையிட்டு, அல்லது அவனது புரிந்துகொள்ளுதலை முத்திரையிட்டு, இனி ஒருபோதும் சுவிசேஷத்தில் விசுவாசம் வைக்க கூடாமல், அவன் பிசாசை என்றென்றுமாக சேவிக்கும்படி முத்திரையிடப்படுகிறான். நம்பிக்கையற்றவனாக, தேவனற்றவனாக, கிருபை யற்றவனாக, இழக்கப்பட்டுப் போய்விடுகிறான், இனிமேல் அவனுக்கு எந்த நம்பிக்கையுமே கிடையாது... இப்போது, இந்த இரண்டு காரியங்களின் அவல நிலை என்னவென்றால் பகைஞனின் முத்திரை ஒரு மார்க்கத்தின் முத்திரையாகும், சரியாகவே, அது தீவிரமான மார்க்க சம்பந்தமானது. நாம் தொடருவதற்கு முன் வேதத்திலிருந்து சிலவற்றை இப்போது வாசிக்க விரும்புகிறேன்... வெளிப்படுத்தின விசேஷம் 9-ம் அதிகாரம், 3 மற்றும் 4 வசனங்கள். அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது. 13. பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. பின்னர் நாம் அதை பல இடங்களில் பார்க்கிறோம்... அது வேதத்தில் எத்தனை இடங்களில் பிரசிங்கப்படுகிறது அல்லது தேவனுடைய முத்திரையைப் பற்றி குறிப்பாக வெளிப்படுத்தின விசேஷ புஸ்தகத்தில் போதிக்கப் படுகிறது என்பதை வேதத்தை வாசிக்கிறவர்களாகிய உங்களுக்குப் புரியும். இப்போது, நேற்று இரவுக்குப் பிறகு, சாத்தானின் முத்திரை என்பது சுவிசேஷத்தை நிராகரிப்பதே என்பதை அடித்தளமிட்டு பார்த்தறிந்தோம், யூபிலியாகிய சுவிசேஷம் என்பது ஒரு நற்செய்தியாகும். அது சரியா? மேலும் ஆதாமின் விழுந்துபோன ஒவ்வொரு புத்திரருக்கும் அதுவே யூபிலி வருஷமாகும். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சுவிசேஷத்தின் மிகச்சிறந்த பலன்களை அவர்கள் பெற்ற பிறகு, அவர்கள் அதை நிராகரித்தால், அந்த ஏற்பாட்டின்படி அவர்கள் ராஜ்யத்திற்கு வெளியே முத்திரையிடப்பட்டு; அவர்கள் தங்கள் எஜமானனை அதன்பின் என்றென்றைக்கும் சேவிக்க வேண்டும். 13. இப்போது, அது என்ன? அவர்களுக்கு எப்படி முத்திரையிடப்பட்டது? அது காதில் முத்திரை யிடப்பட்டது, “விசுவாசம் கேள்வியினாலே வரும்." கேட்பது நிறுத்தப்பட்டால், சுவிசேஷத்தைக் கேட்பதை... நான் சரீரப் பிரகாரமாக கேட்பதை அல்ல; ஆவிக்குரியப் பிரகாரமாக கேட்பதை குறிக்கிறேன். தேவனுடைய நன்மையான காரியங்களால் உங்களுடைய ஆவிக்குரிய காதுகள் அடையாளமிடப்பட்டுள்ளன; நீங்கள் அதை கடைசி முறையாக நிராகரிப்பீர்களேயானால், ஒருக்கால் மிகுந்த பக்திவைராக்கியமுள்ளவர்களாயிருப்பினும், நீங்கள் வெளியே முத்திரிக்கப்படுகிறீர்கள். இப்போது, நீங்கள், “சகோதரன் பிரன்ஹாமே, ஒரு நபர் ஒரு சபையைச் சார்ந்து கொண்டிருந்து, சபைக்குச் சென்று, மேலும் அவர்கள் மிக உத்தமமாக தங்களுடைய எல்லா வழிகளிலும் நேர்மையுடன் இருப்பினும், இன்னும் இழக்கப்பட்டிருக்க முடியுமா?" என்று கேட்கலாம். நிச்சயமாக. அது சரி. அஞ்ஞானிகளும் (Pagans) மற்றும் அஞ்ஞான மார்க்க புறஜாதிகளும் (Heathens) நான் கண்டதிலேயே மிகவும் உத்தமமான ஜனங்கள்: அவ்வளவு உத்தமமாய், தங்கள் குழந்தைகளை பலியிட கொடுப்பது, தங்களைத் தாங்களே சித்திரவதை செய்து கொள்வது போன்ற எல்லாவற்றையும் செய்து, நீங்கள் நினைத்துப் பார்க்கக்கூடிய அனைத்து உத்தமத்தையும் பெற்றுள்ளனர். முகம்மதியர்கள் உத்தமமானவர்கள்; புத்தர்கள் உத்தமமானவர்கள். சமணர்கள் (Jain) உத்தமமானவர்கள், அவர்கள் ஒரு சிறிய எறும்பையோ அல்லது வேறெதையும் தொடாத அளவுக்கு மிக உத்தமமானவர்கள்: குறிப்பாக நான் பார்க்கக்கூடிய இந்த நாளில், கிறிஸ்தவ மார்க்கம் இதுவரை தோற்றுவித்தவைகளை விட மேலான மிக உத்தமமானவர்கள். உத்தமம் என்பது அதுவல்ல. வேதவாக்கியம், "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு” என்று கூறுகிறது. அது எல்லாம் சரியானதாக இருப்பது போல் தோன்றும், ஆனால் தேவன் ஒரு வழியை வைத்திருக்கின்றார். சரியானதாக இருப்பது போல் தோன்றும் வழியில் அல்ல, ஆனால் தேவன் சரியானது என்று சொல்லும் வழியில் நீங்கள் வர வேண்டும். ஆமென். அதுதான் சிலுவையின் வழி. 14. இப்போது, எபேசியர் புஸ்தகத்தில் தேவனின் முத்திரை என்னவென்பதை நாம் வாசிக்கிறோம். பிசாசின் முத்திரை என்னவென்பதை நாம் பார்க்கிறோம். இப்போது, எபிரெயர் 10-ல்... முதலாவதாக, நாம் தேவனுடைய முத்திரைக்குச் செல்வோம்: “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்.” சத்தியம் அளிக்கப்பட்டிருந்தால், இயேசு கிறிஸ்து சத்தியத்தை அளிக்க பூமிக்கு வந்தார், சத்தியத்தை அளிக்க மட்டுமல்ல, அவரே சத்தியமாக இருந்தார். அக்காலத்து மார்க்க சம்பந்தமான ஜனங்கள், "இப்போது, அவர் மனோதத்துவத்தினால் மனதிலுள்ளதை அறிந்து கொள்பவர் என்பதை நாங்கள் அறிவோம். அவர் அங்கே அவர்களுடைய மனதிலுள்ளதை அறிந்து கூறுகிறார் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் அவருடைய சுகப்படுத்துதல் மற்றும் அவர் செய்யும் கிரியைகள் அனைத்தும் பிசாசினால் மட்டுமே அவர் செய்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால் அவர் எங்கள் ஸ்தாபனத்துடன் இணங்கவில்லை.” அதனால் அவர்கள், “அவர் ஒரு பிசாசு” என்றார்கள். அதற்கு இயேசு, "இப்போது நீங்கள் மனுஷகுமாரனுக்கு விரோதமாக அப்படிச் சொல்லலாம். ஏனெனில், சத்தியமானது உங்களுக்கு முன்பாக அளிக்கப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது சத்தியம் என்று உறுதியாக உங்களுக்குத் தெரியும்,” என்றார். நிக்கொதேமு அதை வெளிப்படையாகக் கூறினான், “ரபீ, நீர்தான் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்...." என்றான். நாங்கள் என்பது யார்? பரிசேயர்கள். “நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். அதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்ய மாட்டான். மேலும் நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் அறிந்திருக்கிறோம்.” வேறு வார்த்தைகளில் என்று கூறுவதானால் “உம்முடன் பேசுவதற்காக நான் இராக்காலத்திலே இங்கே மெல்ல நழுவி வரவேண்டி யிருந்தது." ஒரு மரபு, மனிதனை தங்களின் மரபுகளால் பிரிப்பது... ஓ, என்னே. 15. நான் அதைப் பார்க்கும்போது, மேலும் அந்த மகத்தான கிறிஸ்து அங்கே நிற்கிறதைக் காண்கிறேன். அவர், “இப்போது நீங்கள் மனுஷகுமாரனுக்கு விரோதமாக அப்படிச் சொல்லலாம்...” என்று கூறினார், ஏனெனில், பாவநிவிர்த்தி இன்னும் செய்யப்படவில்லை. கிறிஸ்து அங்கே இருந்தார், ஆனால் அவர் ஓட்டினால் மூடப்பட்ட இரத்த அணுவில் இருந்தார். ஆனால் கல்வாரியில் பாவத்தின் காரணமாக, அந்த இரத்த அணு ரோமானிய ஈட்டியால் பிளக்கப்பட்டதன் பின்பு, சிந்தப்பட்ட அந்த இரத்தத்தினூடாக வரும் ஒவ்வொரு விசுவாசிக்கும் பரிசுத்த ஆவியானது அருளப்பட்டது. அதற்கு அவர், “எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை” என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “பரிசேயர்களே, பரிசுத்த ஆவியானவர் இப்போது உலகில் இல்லை, எனவே அது ஒவ்வொரு விசுவாசிக்கும் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் மன்னிக்கப் படுவீர்கள், ஆனால் ஒரு நாள் பரிசுத்த ஆவியின் வருகையில், அதே கிரியைகளை பிசாசு என்று சொல்லி, அந்த சந்ததி அதற்கு விரோதமான ஏதாவது கூறுமேயானால், அது ஒருபோதும் இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை. 16. இதோ, பவுல் அதை எடுக்கிறான். எபிரெயர் 10-ல், "நாம் அவிசுவாசிப்போமானால்..." அல்லது பாவம் என்பது, அவிசுவாசிப்பதுதான் பாவமாகும்: "விசுவாசியா தவனோ, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று." “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய் அவிசுவாசிக்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்” என்று உரைக்கப் பட்டுள்ளது. இது மிகவும் கடினமானதல்லவா? ஆனால் அதுதான் நமக்குத் தேவை. கிறிஸ்தவர்களாகிய நீங்கள், இத்தனை வருட காலங்கள், நாங்கள் கர்த்தருக்குச் சேவை செய்திருக்கிறோம் என்றால், நாம் ஒரு பால் உணவு முறையிலிருந்து வெளியேறும் நேரமாயும், நாம் சில பலமுள்ள ஆகாரத்தை புசிக்கக்கூடிய நேரமாயும் உள்ளது. நமக்கு பலமுள்ள ஆகாரங்கள் இங்கே உள்ளன; நாம் விட்டுக்கொடுத்து அவர் அதைச் செய்யும்படியாக அனுமதிப்போமானால், பரிசுத்த ஆவியானவர் அதை நமக்கு போஷிப்பார். 17.இப்போது, சத்தியம் அளிக்கப்படும்போது அதை நிராகரிப்பீர்களேயானால், உங்களுடைய காதுகள் முத்திரையிடப்பட்டு, நீங்கள் மிகுந்த பக்தி வைராக்கியம் உடையவர்களாய், தேவனை விட்டு விலகுவீர்கள். வேதம், "இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துணிகர முள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப் பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தை (அடிப்படைரீதியிலான எல்லா விதமான வேஷங்களையும்), தேவபக்தியின் வேஷங்களைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.” அது சரியே. அதுதான் வேதவாக்கியம்; வேதம் அவ்வாறுதான் உரைத்துள்ளது. அங்குதான் என் விசுவாசம் நங்கூரமிட்டிருக்கிறது, அது தேவனுடைய வார்த்தையில் இருக்கிறது, மனுஷருடைய பாரம்பரியத்தில் அல்ல, ஆனால் தேவனுடைய வார்த்தையிலுள்ளது. இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அங்குதான் நான் என் நிலைப்பாட்டை வைத்தேன்; இயேசு வரும்போது அல்லது நான் வசிக்கும் இந்த பழைய தொற்றுநோய் நிறைந்த வீட்டிலிருந்து என்னை விடுவிக்க மரணம் வரும்போது நான் அந்த நிலைப்பாட்டிலே நிற்க விரும்புகிறேன். ஆமென். வார்த்தையில் நிற்பது, வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் அது ஒருபோதும் தவறுவதில்லை. அது அழியாதது, நித்தியமானது. 18. பிறகு, நீங்கள் வெறுமனே சபைக்கு செல்வதுதான் என ஜனங்கள் நினைக்கிறார்கள். ஓ, நான் செய்ய வேண்டியதெல்லாம் வெறுமனே சபைக்கு சென்று, ஒரு நல்ல மனுஷனாக இருப்பதுதான்” என்று கூறுகிறார்கள். சகோதரனே, அது தவறு, நீ வஞ்சிக்கப்பட்டுள்ளாய். அது சரியே. ஏசாவும் கூட ஒரு நல்லவன்தான். அப்படியே காயீனும் நல்லவனாயிருந்தான்; இருவருமே தேவபக்தி யுள்ளவர்கள், விசுவாசிகள். காயீன் அவிசுவாசி அல்ல; அவன் ஒரு விசுவாசி. அவன் வந்து, ஒரு சபையைக் கட்டி, ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, அதை அலங்கரித்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, தேவனைத் தொழுது கொண்டான். மேலும் தேவன் அவனிடம் ஆவிக்குரிய வெளிப்பாடு இல்லை என்பதால் அவனை நிராகரித்தார். அவன் தன்னுடைய இருதயத்தின் உத்தமத்தோடு வந்தான். அது மரணத்துக்கும் ஜீவனுக்கும் இடைப்பட்டதுதான் என்று தெரிந்த ஒருவன், நித்தியமாகப் போய்ச் சேருமிட மானது தன்னுடைய பலியின் பேரில் சார்ந்திருக்கிறது என்று தெரிந்தும், வேண்டுமென்றே மனப்பூர்வமாய் அறியாமையில் வருவானென்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இல்லை, ஐயா. அவன் இருதயத்தின் உத்தமத்தோடே வந்து கிடத்தி இருந்தான்...ஆனால், சகோதரனே பாருங்கள், உங்களுடைய எல்லா உத்தமமும் அது ஒரு பொருட்டல்ல, தேவன் ஒரே ஒரு வழியைத்தான் வாக்குத்தத்தம் செய்துள்ளார். 19. ஒரு ஆப்பிள் அல்லது நீங்கள் அதை என்ன அழைக்க விரும்புகிறீர்களோ, அதற்கு பதிலாக ஒரு ஆட்டுக் குட்டியைக் கொண்டுவர ஆபேல் அறிந்திருந்தான் என்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வர அவனுக்கு எப்படித் தெரிந்திருந்தது? ஏனெனில் அவர்களுடைய நாட்களில் வேதாகமம் எழுதப்படவில்லை; அது கர்த்தரால் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. மறுரூபமலையிலிருந்து இறங்கிய பிறகு இயேசு சொன்னார்... இதுதான் காரியம்; நீங்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மறுரூபமலையிலிருந்து இறங்கி வந்து, இயேசு, "மனுஷகுமாரனாகிய என்னை நீங்கள் யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். ஒருவன், "நல்லது, சிலர் உம்மை மோசே என்றும்; சிலர் உம்மை எலியா என்றும்; சிலர் உம்மை தீர்க்கதரிசி என்றும் சொல்லுகிறார்கள்” என்றான். அதற்கு அவர், "நான் வினவினது அதுவல்ல. நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?” என்றார். பேதுரு அதற்கு "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். 20. இப்பொழுது, கத்தோலிக்கத் திருச்சபை அது அங்கே ஒரு பாறை இருந்ததென்றும், அந்த பாறைதான் பேதுரு என்றும் கூறுகிறது. அவர்கள் பேதுருவின் மீது சபையைக் கட்டினார்கள். பிராடெஸ்டெண்டு சபை, “இல்லை, அது இயேசு” என்று கூறுகிறது. நான் இவ்விரு தரப்பினருடனும் வெளிப்படையாகவே வேறுபடுகிறேன். இரண்டுமே இல்லை. ஏனெனில், பேதுரு இப்படி கூறியிருந்தான், பாருங்கள்... அவர், “நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். பேதுரு அதற்கு “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். அதற்கு அவர், "யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை,” (நீ அதை வேதாகம கல்லூரிகளில் ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை. நீ வேறு எந்த வழியிலும் கற்றுக்கொள்ளவில்லை), “ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக்கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” அது ஆவிக்குரியவகையில் வெளிப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவைப்பற்றின சத்தியமாகும். நீங்கள் அதிகமாய் உணர்ச்சிவசப்பட்டாலும், அது கிரியை செய்யாது. அது, தேவன்தாமே தெரிந்துகொள்ளுதலின்படி உங்களை அழைத்து, கிறிஸ்துவை உங்களுக்கு வெளிப்படுத்தினார் என்ற ஒரு நேரடி சாட்சியாக இருக்க வேண்டும். ஆமென். 21. சில ஜனங்கள் வெறுமனே உணர்ச்சிவசப்படுகிற பாகத்திற்காக மட்டுமே சபைக்கு வருகிறார்கள். சில ஜனங்கள் பாடுவதற்காக மட்டுமே சபைக்கு வருகிறார்கள். சில ஜனங்கள் நல்ல பாடலை ரசிப்பதற்காக சபைக்கு வருகிறார்கள், அதெல்லாம் சரிதான். சில ஜனங்கள் சபைக்கு வந்து, தங்களின் கீழ்த்தரச் செயல்களை மறைக்கவும், அண்டை வீட்டார் (neighborhood) மத்தியில் தங்களுக்கு கொஞ்சம் நற்பெயரை உருவாக்கவும் சபையில் சேருகிறார்கள். சிலர் உத்தமமாக சபைக்கு வருகிறார்கள், ஆனால் தேவனிடமிருந்து ஒருபோதும் ஒரு சிறு தொடுதலையும் பெறுவதில்லை. ஆனால் தேவன் ஒரு மனுஷனை அழைக்கும்போது, “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.'' மேலும் வருகிற அனைவருக்கும், நான் அவனுக்கு நித்தியஜீவனைக் கொடுத்து, கடைசிநாளில் அவனை எழுப்புவேன்.” ஓ, நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன். சகோதரனே, அது தனி ஒருவனுக்கு வெளிப்படுத்துகிற பரிசுத்த ஆவியானவரின் கிரியை யாகும், ஏதோ உணர்ச்சிவசப்படுகிறதின் மீது அல்ல, நீங்கள் செய்ய வேண்டிய ஏதோ ஒன்றின் மீது அல்ல, அல்லது செய்யக்கூடாத ஒன்றின் மீதோ, அல்லது இது, அது, அல்லது மற்றவைகளோ அல்ல. அந்த எல்லா காரியங்களும் சரிதான், அந்த அசைவுகளும், கிரியைகளும், கூச்சலும், நடனமும், அந்நியபாஷைகளில் பேசுதலும்; அந்த எல்லா காரியங்களும் சரிதான். ஆனால் முதலாவது காரியம் என்னவென்றால், தேவன் தனிப்பட்ட ஒருவனை அழைத்து இயேசு கிறிஸ்துவே தேவனுடைய குமாரன் என்று அருளின ஆவிக்குரிய வெளிப்பாடாய் இருக்க வேண்டும். அது சரி. சகோதரனே, அது இல்லாமல், நீ ஆள்மாறாட்டம் மட்டுமே செய்கிறாய், பாசாங்கு மட்டுமே செய்கிறாய். 22. தேவனின் முத்திரை என்னவென்று எபேசியரில் இங்கே நாம் பார்ப்போம். எபேசியர் 1-ம் அதிகாரம், 12 மற்றும் 13 வசனங்கள் (தமிழில் 11 மற்றும் 13 வசனங்கள் - தமிழாக்கியோன்) மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள்.. எபேசியர் 4:30 இவ்விதமாக உரைக்கிறது, "அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.' எதுவரைக்கும்? இப்போது, ஆர்மீனிய (Arminian) சகோதரனே, நான் சற்றே கொஞ்சம் கடுமையாக உம்மிடம் நடக்க வேண்டியுள்ளது, ஆனால் நீர் அதை மன்னித்துவிடும். உமக்குப்புரிகிறதா? எதுவரைக்கும் ? ஒரு கூட்டத்திலிருந்து மற்றொரு கூட்டம் வரைக்குமாகவோ, அவர்கள் ஒரு எழுப்புதலிலிருந்து ஒவ்வொரு உபதேசக் காற்றினாலும் பல்வேறு திசைகளில் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப் பட்டு கொண்டு செல்லப்படும் வரைக்குமாகவோ அல்ல, மாறாக நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும். ஆனால் ஒரு மனிதன் பரிசுத்த ஆவியினால் ஒருமுறை நிரப்பப்படு வானாகில் அவன் நித்திய ஜீவனின் வாக்குத்தத்தத்தைக் கொண்டிருக்கிறான், “கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்." ஆமென். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு (நிகழ்காலம்) நித்தியஜீவன் உண்டு: அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்”. அதை துடைத்து அழித்து விடுங்கள். ஊக்குவிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தை, பரிசுத்த யோவான் 5:24. அதை நீ விசுவாசித்தாலும்... தேவன் உன்னை முதலில் அழைக்கா விட்டால் நீ விசுவாசிக்க முடியாது. பின்னர், “மாறு” (Change) என்று உரைத்து உன்னுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவரால் உனக்கு வெளிப்படுத்தப் படுகிறது. அதன்பின், நீ கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புது சிருஷ்டியாயிருக்கிறாய்; பழையவைகள் ஒழிந்துபோயின. மேலும் நீ – எல்லாம் புதிதாயின.. அங்கேதான் காரியம், எல்லாவற்றினாலும் நீ அலைக்கழிக்கப்படுவதில்லை. நீ இந்த வழியிலிருந்து அந்த வழிக்கு அலைக்கழிக்கப்பட்டால், மெதடிஸ்ட்டாக ஒரு வாரம், அடுத்த வாரம் ஒரு பாப்டிஸ்ட்டாக, அடுத்த வாரம் ஒரு பிரஸ்பிடேரியனாக, மேலும் நீ ஒரு ஊழியத்திலிருந்து மற்றொரு ஊழியத்திற்கு ஓடுகிறாய் என்றால், நான் ஒரு காரியம் சொல்ல வேண்டியுள்ளது: நீ இன்னும் நிலையாகவே இல்லை. ஓ, “சகோதரன் பிரன்ஹாமே, ஆனால் பாருங்கள், என்னிடம் நிறைய...” என்று கூறுவாயானால், ஓ, சகோதரனே, என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது. நான் வார்த்தையுடன் தரித்திருக்க வேண்டும்; அதைத்தான் வார்த்தையும் உரைக்கிறது. இன்று உற்சாகம் கொண்டு, நாளை சோர்ந்துபோய், அடுத்த நாள் பின்மாற்றமடைந்து, அடுத்த நாள் திரும்பி வந்து, “ஓ, நாங்கள் சூதாடிக்கொண்டும், மற்ற எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தோம்” என்றால், நீ உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால் தேவனுடைய அன்பு உன்னிடத்தில் இராது. ஆமென். 24. பெந்தெகொஸ்தேயினர் செவ்வையாக்கப்பட்டிருக்க வேண்டிய நேரம் இதுவென நீங்கள் நினைக்கவில்லையா? அவர்கள் எவ்வளவு லௌகிக பிரகாரமாகிவிட்டனர் என்பதை நோக்கிப்பாருங்கள். மற்றவர்களைப் போலவே, மிகவும் லௌகிகமாகிவிட்டனர். பழைய சந்ததி போய் விட்டது. பிள்ளைகள் கேளிக்கை செய்வதற்காக வந்து, வேத சாஸ்திரம் மற்றும் மற்ற எல்லாவற்றிலும் அதை வெளிப்படுத்தி, மேலும் ஜனங்கள் ஏனைய உலகத்தைப் போல செயல்படும் வரைக்குமாக தங்களை மாதிரியாக்கிக் கொள்கின்றனர். நீங்கள் தேவனிடத்திற்கு வரும்போது வேறுபிரிந்த ஜனங்களாயிருக்கிறீர்கள், ராஜரீக ஆசாரியராய், பரிசுத்த ஜாதியாய், உதடுகளின் கனிகளால் தேவனுக்கு ஸ்தோத்திரபலியை ஏறெடுத்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரிக்கிறீர்கள். ஆமென். அது சரி. 25. அந்த முத்திரை, முத்திரை என்பது ஒரு முடிவு பெற்ற கிரியையாயிருக்கிறது; தேவன் அந்த நபரில் தனது கிரியையை முடித்துவிட்டார். ஆமென். மேலும் பிசாசின் முத்திரை என்பது ஒரு முடிவு பெற்ற கிரியையாயிருக்கிறது. பிசாசு அவனைக் கட்டுக்குள் எடுத்துக் கொண்டான்; தேவனால் அவனில் ஒன்றுமே செய்ய முடியாது. அவர் அவனது இருதயத்தை தட்டினார்; அதற்கு அவன் செவிகொடுக்காமல், அப்படியாக அவன் தொடர்ந்து திரும்பிப்போனான். தேவன் ஒருவரும் கெட்டுப்போக விரும்புகிறதில்லை, நீடிய பொறுமையுடன் அவர் வேறொரு சுவிசேஷ பிரசங்கியை அனுப்பி, அடையாளங்களையும், அற்புதங்களையும் காண்பித்தார். பரிசுத்த ஆவியானவர், “நீ அதற்குச் செவிகொடுப்பது நல்லது” என்றார், அவன் கடைசி முறையாக தனது முகத்தை திருப்பிக் கொண்டான். அப்போது அவனது எஜமான் அவன் ஆவிக்குரியவிதமாக கேட்பதை நிறுத்திப் போடுகிறான். அவன் துணிகரமுள்ளவனாகவும், இறுமாப்புள்ளவனாகவும் ஆகிறான். “நல்லது, நான் ஒரு டாக்டர் அல்லது Ph.D அல்லது LL.D பட்டத்தை பெற்றுள்ளேன். எனவே நான் ஏன் அந்த பைத்தியக்கார ஜனங்களுக்கு செவிசாய்க்க வேண்டும்." நாம் சில நிமிடங்களில் அதற்குள்ளாக செல்வோம், முன் நாட்களில் இதே காரியம் நடந்தது என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். ஆம், அவ்வாறுதான். 26. “நான் நகரத்திலுள்ள சிறந்த சபையைச் சேர்ந்தவன்; நான் நகரத்தில் சிறந்த அந்தஸ்தில் உள்ளவர்களோடு இருக்கிறேன்; நான் இதை பெற்றுள்ளேன். நான் இன்னார் இன்னார்.” எது எப்படியாயினும் நீ யார்? ஆறு அடி மண்தானே! ஆமென். அவ்வளவுதான்; யாவரும் ஒரே விதமாகவே உண்டாக்கப்பட்டுள்ளோம். ஆமென். எண்பத்து நான்கு சென்ட் மதிப்புள்ள ஒரு சரீரத்தை சுற்றி நூறு டாலர் மதிப்புள்ள உடையை (suit) போர்த்திக்கொண்டு, நீ யாரோ பெரிய ஒருவனைப்போல் செயல்படுகிறாய். அது சரி. வேதியியல் ஆராய்ச்சி நூற்றைம்பது பவுண்டு (சுமார் 68 கிலோ - தமிழாக்கியோன்) எடையுள்ள ஒரு மனுஷனின் மதிப்பு எண்பத்து நான்கு சென்ட் என்றும், ஸ்திரீயின் மதிப்பு அதை விட குறைவு என்றும் காட்டுகிறது. நிச்சயமாக. இப்போது, அது ஒரு கேலிப்பேச்சு அல்ல; அது தான் உண்மை. நீ இன்னார் இன்னார் சபையை சேர்ந்தவனென்ற காரணத்தினால், நூறு டாலர் உடையை அணிந்துகொண்டு அல்லது உரோமத்தாலான சிறந்த மேல்சட்டைகளை அணிந்துகொண்டு வீதியில் இறுமாப்பாய் நடந்து செல்லலாம். நீ பீடத்திற்கு திரும்ப வரவேண்டிய தருணம் இதுதான், சாத்தான் உன்னை ராஜ்யத்திலிருந்து வெளியேற்றி முத்திரையிடுவதற்கு முன், தேவனுடன் சரிசெய்துகொள். ஆமென். அதுதான் சத்தியம்; அதுதான் சத்தியம் என்று உனக்குத் தெரியும். நீ வேறுபிரித்திடும் கோட்டைக்கடக்காதவரையில், உன்னுடைய மனசாட்சியும் (conscience) கூட அதுதான் சத்தியம் என்று உனக்குச் சொல்கிறது. நீ சரியாக இருக்கிறாயென நினைத்துக் கொண்டு, நீ வேறுபிரித்திடும் கோட்டைக் கடப்பாயாகில், ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு பொய்யை விசுவாசிக் கத்தக்கதாக நீ - நீ வஞ்சகத்திற்கு, பிசாசின் சிந்தைக்கு ஒப்படைக்கப்படுகிறாய். 27. ஏசா தான் சரியாக இருந்தான் என்று நினைத்ததை நினைவில் கொள்ளுங்கள். அவன் யாக்கோபுடன் பிறந்த ஒரு இரட்டை சகோதரன். யாக்கோபு ஒரு விதத்தில் கூச்ச சுபாவமுள்ளவன். ஆனால் அவன் ஒன்றை மாத்திரம் கொண்டிருந்தான், அவன் சேஷ்ட புத்திரபாகத்தின் பலனை உடையவனாயிருந்தான். அவன் தன் முழு ஆத்துமாவையும் அதன் மையக்கருவின் பேரிலே வைத்திருந்தான். அதுதான் இன்றிரவு சபைக்குத் தேவையாய் இருக்கிறது, நீ இதை நடத்த முடியுமா, அல்லது நகரத்தில் சிறந்த இடத்தைப் பெற முடியுமா, அல்லது மிகப்பெரிய சபை மற்றும் பலவற்றைக் கொண்டிருக்க முடியுமா என்பது அவ்வளவு முக்கியமல்ல. உங்களுடைய சிந்தையை சேஷ்ட புத்திரபாகத்தின் மையத்திலே வையுங்கள். ஆமென். ஓ, என்னே! நான்- நான் பக்தியுணர்ச்சி அடைகிறேன். பாருங்கள். நான் நினைக்கிறேன் இன்று... சில ஜனங்கள், “நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, ஒரு நிமிடம் பொறுங்கள். நானும் பெந்தெகொஸ்தேயினன் தான், நான் கூச்சலிட்டேன், மேலும் அந்நியபாஷைகளில் பேசியும், இன்னும் நான் பிற காரியங்களை செய்தும் இருக்கிறேன்” என்று கூறுகிறார்கள். அது தேவனின் ஒரு வரமாகும் (அது சரி.)வேறல்ல... 28. இவ்விடத்தில், என் உறவினச் சகோதரன் (cousin) இந்த உடையை எனக்குக் கொடுத்தான், ஆனால் அது என்னை ஒரு பிரன்ஹாமாக ஆக்கவில்லை. அது ஒரு வெகு மதியாகும். நான் பிரன்ஹாமாகப் பிறந்தேன்; இதுவோ ஒரு பிரன்ஹாமிடமிருந்து வந்த ஒரு வெகுமதியாகும். ஆமென். என் பெயர் ஜோன்ஸ் ஆக இருந்து, நான் ஒரு பிரன்ஹாமிடமிருந்து ஒரு வெகுமதியைப் பெற்றிருந்தால், அது என்னை ஒரு பிரன்ஹாமாக ஆக்காது. முத்திரையிடப்பட்டு, ராஜ்யத்திற்குள் தேவனுடைய செய்து முடிக்கப்பட்ட கிரியையாக, நீ பரிசுத்த ஆவியினால் ஒரு கிறிஸ்தவனாகப் பிறக்க வேண்டும், சில உணர்ச்சியை வெளிப்படுத்திக்காட்டுதலால் அல்ல (அல்லேலூயா!). ஆமென். நான் கூச்சலிடுகிறேன் என்று எனக்குத் தெரியும், ஆனால் என்னைப்போலவே நீயும் உணர்ந்தால், நீயும் கூட கூச்சலிடுவாய். கவனிக்கவும், உணர்ச்சி இல்லாத எந்தவொன்றும் மரித்ததாயுள்ளது. உன்னுடைய மார்க்கம் அதைப்பற்றி சிறிதும் உணர்ச்சிவசப்பட வில்லையென்றால், நீ அதை புதைப்பது நல்லது...? .. சரி. அது சரி. 29. தேவன் முத்திரையிட்டு, தம்முடைய கிரியையை முடிக்கிறார்... பரிசுத்த ஆவியானவாராகிய தேவன், உலகத் தோற்றத்திற்கு முன்னே, நம்மை தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக முன்குறித்து, தமது திட்டத்தை முடித்து, முழு காரியத்தையும் ஒழுங்குபடுத்தி, அழைப்புவிடுத்து, பின்னர் அவர் உன்னுடைய இருதயத்தைத் தட்டினார். (சகோதரன் பிரன்ஹாம் தட்டுகிறார் ஆசி.) நீங்கள் எச்சரிக்கப்பட்டு, அவரிட வந்தீர்கள். உங்களுக்கு புரிதலைத்தர, பிரசங்கிமார்களை அனுப்பி, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். நீங்கள் அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, முன்னே வந்து, "கர்த்தாவே, இப்போது என்னை உம்மை சேவிக்க வைப்பீராக” என்று சொன்னீர்கள். வாக்குத் தத்தத்தின் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து கிரியையை முடித்து, பின்னர் அவர் உங்களை மீட்கப்படும் நாளுக்கென்று தேவனுடைய ராஜ்யத்தில் முத்திரை யிடுகிறார். எல்லாம் முடிந்து; கதவு அடைக்கப்பட்டு, நீங்கள் கிறிஸ்துவுடன் உள்ளே இருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் நீங்கள் உங்களுடைய நித்தியமாகப் போய்ச் சேருமிடத்திற்கு உங்களை முத்திரையிடுகிறார். ஆமென். உலகிற்கு அந்நியர்களாய் (Aliens), பரதேசிகள் மற்றும் அந்நியர்களாய், உங்களுக்கு உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாது அல்லது அதைப்பற்றி எந்தக் கவலையுமில்லை என்று அறிக்கையிடுகிறீர்கள். அதற்குப் பதிலான (alternative) ஒன்றை நீங்கள் பெற்றுள்ளீர்கள்: அது கர்த்தராகிய இயேசுவை சமாதானத்தோடே சந்திக்கின்ற உங்களுடைய இறுதியாக சென்றடையும் ஸ்தலமேயாகும். ஆமென். அது நிச்சயமான சத்தியமாக இருக்கிறது. 30. கல்வாரியை நோக்கிப் பாருங்கள். அந்த இரத்த அணு கூடாரமிட்டபோது, தேவன்தாமே கீழே இறங்கி, மரியாளின் கர்ப்பத்தில் தன்னைச் சுற்றி ஒரு இரத்த அணுவை உருவாக்கினார். ஒரு அணுவின் மேல் அணுவாக, அந்த இரத்த அணு மற்றொரு அணுவை உருவாக்கியது. அது கன்னிப் பிறப்பான தேவ குமாரனாக பிறந்தது; ஆவியாகிய தேவன் அவருக்குள் இருந்தார். அதன்பின் கல்வாரியில் அவர் இரத்த பலியானார். ஒரு கொடூரமான ஈட்டி அவரது சரீரத்தை ஊடுறுவித்துளைத்து, அந்த இரத்த அணுவை உடைத்தது; அதிலிருந்து ஜீவன் வந்தது, ஜீவன் பிளந்து தண்ணீர், இரத்தம், ஆவியாக வெளியேறியது. இப்போது இயேசு கிறிஸ்துவிடம் இன்று வருகின்ற அந்த மனிதன், இரத்தத்தினூடாக வருகையில், பரிசுத்த ஆவியால் அந்த இரத்த அணுவுக்குள்ளாக ஐக்கியத்தில் வரும்போது, தேவனின் ஒரு பாகமாக மாறி, தேவனின் ஜீவனை அவனில் பெற்று, தேவனுடைய குமாரனாகவும் குமாரத்தியாகவும் ஆகிறான். தேவன்தாமே இழக்கப் படுவது எப்படி சாத்தியமற்றதோ, அது போலவே அந்த மனிதன் இழக்கப்படுவதும் சாத்தியமற்றது. 31. "நான் அவர்களுக்கு நித்திய ய ஜீவனைக் கொடுப்பேன்”. “நித்தியம்” என்பது கிரேக்க பதமான ஸோயீ (Zoe), "தேவனுடைய சொந்த ஜீவன்” என்பதிலிருந்து வருகிறது. தேவனுடைய ஜீவன் தனி ஒருவரில் உள்ளது. நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும் அதனால் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். அதுதான் தேவனின் முத்திரை. நீங்கள் அவ்வாறு செய்யும்போது, நீங்கள் கிறிஸ்துவைப் போலாகிறீர்கள். உங்களை வெறுப்பவர்களை நேசிப்பீர்கள். பிதாவின் சித்தத்தை செய்வது என்ற ஒரு நோக்கத்திற்காக நீங்கள் இருக்கிறீர்கள். எல்லா சகோதரர்களையும் அழைத்து, உங்களுடைய சத்துருக்கள் மீதும் உங்களுடைய கைகளைப் போட்டு அவர்களை நேசிப்பீர்கள். பரிசுத்த ஆவியானவரின் மகத்தான கிரியைகளைச் செய்து, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படுவீர்கள், மேலும்... 32. நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? இங்கே, நீங்கள் இப்படியாக, "ஓ, தேவனுக்கு மகிமை, நாம் அவர்களை மிஞ்சிவிட்டோம். அல்லேலூயா. பழைய பருந்துக் கூட்டை (Buzzard Roost) அங்கே பாருங்கள்; இன்று அவர்கள் எதையுமே பெற்றிருக்கவில்லை. நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நம்முடைய ஞாயிறு பள்ளி அவர்களுடையதை விட பெரியது, நாம் இதை, அதை, வேறொன்றைச் செய்திருக்கிறோம். தேவனுக்கு மகிமை, நமது குழுவினர் அனைவரும் காடிலாக்ஸ் (Cadillacs) காரில் வருவதைப் பாருங்கள். அங்கே அவர்களிடம் அந்த பழைய டி மாடல் ஃபோர்டு (T Model Ford) கார்கள்தான் உள்ளன” என்று சொல்லலாம். அவர்கள் உங்களை விட செல்வ செழிப்பில் மேம்பட்டவர்களாக இருக்கலாம். அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படுங்கள். ஆமென். ஓ, என்னே. சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகித்தல், நீடியபொறுமை, நற்குணம், தயவு, பொறுமை அதுவே பரிசுத்த ஆவி. பரிசுத்த ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், பொறுமை; அதுதான் ஆவியின் கனி. 33. நாம் அதை வேறு ஏதோ ஒன்றின் மீது வைக்கிறோம். நீங்கள் பிணியாளிகளின் மீது கைகளை வைத்ததின் நிமித்தமாக, அவர்கள் சுகம் பெற்றதால், அதற்கு அவர்கள், "நல்லது, சகோதரனே, அவர் நிச்சயமாக அதைப் பெற்றுள்ளார்” என்று கூறுவர். யாரோ ஒருவர் அந்நிய பாஷைகளில் பேசுவதின் நிமித்தமாக, யாரோ ஒருவர் அதற்கு வியாக்கியானம் கொடுத்ததன் நிமித்தமாக, "சகோதரனே, அவர் அதைப் பெற்றிருக்கிறார்” என்று கூறுவர். ஆம் ஐயா. எனக்கு தெரியும் அவர் அந்நியபாஷைகளில் பேச நான் கேட்டிருக்கிறேன்; அவர் அதைப் பெற்றிருக்கிறார் என்பதை நான் அறிவேன், அவர் பிணியாளிகளைச் சொஸ்தப்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். அவர் ஒரு தரிசனத்தைக் கண்டார்; அவருக்கு ஒரு வெளிப்பாடு இருந்தது. ஓ, பிரசங்கமென்றால்... ஒரு மனிதன் இந்தவிதமாக பிரசங்கிப்பதை நீங்கள் ஒருபோதுமே கேட்டதில்லை” எனலாம். அந்த காரியங்கள் எதுவுமே நீங்கள் அதைப் பெற்றதற்கான அடையாளம் அல்ல. “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல அறிவையும், வேதத்தின் ஞானத்தையும் மற்றும் எல்லாவற்றையும் அறிந்தாலும், நான் ஒன்றுமில்லை” என்று பவுல் கூறுகிறான். "இதே வேத சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, விசுவாசத்துடனே அந்நாளில் அநேகர் என்னிடம் வருவார்கள்" என்று இயேசு கூறினார். "நல்லது இப்போது, உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினேன் அல்லவா? உமது நாமத்தினாலே நான் பிரசங்கித்தேன், தீர்க்கதரிசனம் உரைத்தேன் அல்லவா? நான் அநேக பலத்த கிரியைகளை செய்துள்ளேன்,” என்று கூறுவர்... அதற்கு அவர், “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்றுபோங்கள்” என்பார். 34. உங்களுக்கு அது புரிகிறதா? தேவனே நமது நித்திய நியாயாதிபதி, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளீர்களா அல்லது இல்லையா என்று தேவன் ஒருவரைத் தவிர, வேறு யாருமே உங்களை நியாயந்தீர்க்க முடியாது. “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று சொல்லுகிற ஒரு அடையாளம் நமக்கு உண்டு. அவர்களின் சபை இணைப்பினால் அல்ல, அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். சபையுடன் இணைத்துக் கொள்வதுதான் ஒரு அடையாள மென்று வேதாகமத்தில் எங்குமே கூறப்படவில்லை. கூச்சலிடுவது தான் ஒரு அடையாளமென்று வேதாகமத்தில் எங்குமே கூறப்படவில்லை. அந்நியபாஷைகளில் பேசுவதுதான் ஒரு அடையாளமென்று வேதாகமத்தில் எங்குமே கூறப்பட வில்லை. பிணியாளிகளைச் சொஸ்தமாக்குவதுதான் ஒரு அடையாளமென்று வேதாகமத்தில் எங்குமே கூறப்படவில்லை. ஆவியின் கனிகளே விசுவாசியின் அடையாளமாகும். ஆவியின் கனிகளானது தரிசனங்களைக் காண்பதல்ல, பிணியாளிகளைச் சொஸ்தமாக்குவதல்ல, அந்நிய பாஷைகளில் பேசுவதல்ல, கூச்சலிடுவதல்ல. ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, நற்குணம், தயவு, சாந்தம், பொறுமை. ஆமென். அதுதான் தேவனின் முத்திரை. ஆமென். இது சற்றே பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால் நாம் இன்னும் சில நிமிடங்களில் பழைய ஏற்பாட்டிற்கு செல்வோம். அது சரி. அதை புதிய ஏற்பாட்டிற்கு கொண்டு வந்து அது அப்படியாக உள்ளதல்லவா என்று கண்டறிவோம். அது தான் சத்தியம். சகோதரனே, நீங்கள் திரும்பி சரியானபடி துவங்கினால், தேவன் இந்த தேசத்தை எழுப்புதலால் அசைப்பார். ஆனால் நீங்கள் தேவனிடம் திரும்பி வர வேண்டும். பாரமான யாவற்றையும் உன்னைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, துவக்குகிறவரும் முடிக்கிற வருமாயிருக்கிறவரை நோக்கி, உன் சபையை நோக்கியல்ல... உனக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடு: [ஒலி நாடாவில் வெற்றிடம் ஆசி.)....வரும்போதே... 35. [ஒலி நாடாவில் வெற்றிடம் - ஆசி.)... தேவனின் முத்திரை. எசேக்கியேல் 9-வது அதிகாரத்தில் (தாள்கள் வைத்துள்ளவர்கள் குறித்துக் கொள்ளுங்கள்), தீர்க்கதரிசி யாகிய எசேக்கியேல் ஒரு தரிசனத்தில் கொண்டு செல்லப்பட்டான், பல ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் ஐம்பது ஆண்டுகள் அல்லது வருகைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு... நான் அப்படிச் சொல்லவில்லை; அதாவது வருகைக்கு சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு. பின்னர் அவன் அவ்வாறு ஒரு தரிசனத்தில் கொண்டு செல்லப்பட்டபோது, அவன் தவறாயுள்ள காரியங்களைக் கண்டான்: புருஷர் தங்கள் முதுகுகளைப் பலிபீடத்திற்கு திருப்பியவாறு இருந்தனர். அவர் அவனை நகரத்திலே உயர்ந்த வாசலுக்குக் கொண்டுபோனார். இப்பொழுது கவனியுங்கள். அவர் சொன்னார்... அவர் எருசலேம் நகரத்தையும், அக்கிரமத்தையும், அங்கு நடந்து கொண்டிருந்த அனைத்தையும் அவனுக்குக் காண்பித்தார். இப்போது கவனியுங்கள் அவர் ஒரு நகரத்தை, ஒரு இடத்தை குறிப்பிட்டிருந்தார். அவர் இது நடந்து கொண்டிருந்த அந்த எருசலேம் நகரில் இதை கூறினார். அப்போது ஆறு புருஷர் வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு வருவதைக் கண்டான். கவனியுங்கள், மனிதன் கிருபையை நிராகரிக்கும்போது, ஒரே ஒரு காரியம் மட்டுமே எஞ்சியிருக்கிறது, அதுதான் நியாயத்தீர்ப்பு. தேவன் தயையுள்ளவர், ஒருவரும் கெட்டுப்போக விரும்புகிறதில்லை. ஆனால் நீங்கள் அழிவுக்குள்ளாகும்படி ஏதாகிலும் செய்தால், அதை நீங்களே செய்கிறீர்கள். நீங்கள் அதை சுயாதீனம் மூலம் செய்கிறீர்கள்; நீங்கள் வாஞ்சையினால் அதைச் செய்கிறீர்கள். தேவன் நீங்கள் அதைச்செய்ய விரும்ப வில்லை, ஆனால் நீங்கள் எது எப்படியானாலும் அதைச் செய்கிறீர்கள். நீங்களே வலுக்கட்டாயமாக போராடி அதைச் செய்கிறீர்கள். 36. கவனியுங்கள், பின்னர் அவன் பார்த்தபோது, ஆறு புருஷர் வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு வந்தார்கள், அங்கிருந்து வெண்ணங்கி தரித்து தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷன் பலிபீடத்திலிருந்து வந்தான் (3- வது வசனம்). மேலும் கவனியுங்கள், புருஷர் நகரத்தில் சென்று வெட்டுவதற்கு முன்பு, அவர் "நீ முதலில் போய்..." என்றார். நியாயத்தீர்ப்பிற்கு முன் முதலில் தேவனுடைய இரக்கம்... அதைத்தான் அமெரிக்கா இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறது என்று நான் நிச்சயிக்கிறேன்; நியாயத் தீர்ப்பிற்கு முன் தேவனுடைய இரக்கம் ஜனங்களுக்கு அளிக்கப்பட்டது; பின்பு, இந்த புருஷன் தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்து சென்றதைப் பார்த்து...... அவர் “நீ நகரத்திற்குள் பிரவேசித்து, எருசலேமிலே செய்யப்படுகிற சகல அருவருப்பு களினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் முத்திரைபோடு” என்றார். வேறுவகையில் கூறுவோமானால், கி.பி 96-ல் பெரும் அழிவுக்கு முன்பு, தீத்து எருசலேம் நகரத்தின் மதில்களை முற்றிக்கையிட்டபோது (sieging), வெண்ணங்கி தரித்து, தன் அரையிலே எழுத்தாணி, எழுதுகோலை வைத்திருந்த புருஷனாகிய அந்த பரிசுத்த ஆவியானவர் முதலில் புறப்பட்டுப் போய், அந்த நகரத்தில் செய்யப்பட்ட அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுத மனுஷரின் மீது அடையாளம் போட்டார். அவர்கள் ஆயத்தப்படுவதற்குரிய நிச்சயத்தை உடையவராக இருக்கும்படியாக தேவன் அதை முன்னறிவிக்கிறார். 37. நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். பரிசுத்த ஆவியாகிய அதே தேவதூதனானவர், அவருடைய தூய்மைக்கொத்த வெண்ணங்கி தரித்து, அந்த நகரத்திற்கு வந்திருப்பாரானால்... அந்த தேவதூதன் இன்றிரவு இந்த நகரத்திற்கு வந்து, பெந்தெகொஸ்தே சபையினூடாக செல்வாராகில், நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டழுது, கெஞ்சி இராமுழுவதும் மன்றாடும் மனுஷரை அவர் உலகில் எங்கே காண்பார். யாரை அவர் அடையாளம் போடுவார்? யார் பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் என்பதை நாம் விரைவில் காணப்போகிறோம். பெருமூச்சுடனும், அழுது கொண்டும்... நாம் ஏன் இவ்வளவு ஆணவமுற்றவர்களாய், மிகவும் அலட்சியமுடையவர்களாய் ஆகிவிட்டோம், ஒருவேளை, நாம் எழுந்திருக்கும்போது, "தேவனே என்னையும், மரியாளையும், மார்த்தாளையும் மற்றும் குடும்பத்தின் மற்ற அனைவரையும் ஆசீர்வதியும்” என்று சின்னஞ்சிறு ஜெபம் செய்கிறோம். மற்றவர்கள் தங்களால் இயன்றதைச் செய்கிறார்கள். வீதியில் புருஷரும் ஸ்திரீகளும் பாவம் செய்து கொண்டிருக்கின்றனர்... அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். இழக்கப்பட்டு போனவர்களினிமித்தம் இனி எந்த பாரமுமில்லாமல், வெறுமனே அவர்கள் எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிட்டு, சிலரைத் தங்களுடைய மார்க்கத்துக்கு மாற்றி, தங்களுடைய இழப்பை சரிசெய்ய உதவி, நமது ஸ்தாபனத்தை மிகப்பெரியதாக மாற்ற அதை சரிசெய்து, அநேக ஜனங்களை சபைக்குள் கொண்டு வந்தால் போதும் என்று நாம் சற்றே திருப்தி அடைந்தோம். சகோதரனே, அது பண்டைய பாணியிலான விளக்கெண்ணெயாக இருக்கலாம், ஆனால் அது உங்களை சரிசெய்யும். அது சரி. ஆமென். நீங்கள் அதைப் புரிந்துக் கொண்டீர்கள் என்று நம்புகிறேன். 38. “அதனால்தான் என் ஸ்தாபனத்தில்.. நான் - நான் அடுத்த ஆண்டு தலைமை சபை மூப்பராக, ஒருவேளை நான் ஒரு மாகாண அதிகாரியாக அல்லது ஏதாயினும் ஒன்றாக வேண்டும்.” அந்த பிரசங்கிக்கு அதைக்குறித்து தான் கவலையே தவிர வேறொன்றின் மீதுமில்லை. முன்னே வா, பிரசங்கியே, அவர்களுடன் சேர்ந்து நாமும் அதை எடுத்துக் கொள்ளப்போகிறோம். அது சரி. ஓ, என்னே, நகரத்தில் இழைக்கப்படுகின்ற பாவங் களுக்காகவும், அருவருப்புக்காகவும், அவமானகரமான வற்றிற்காகவும் முழங்காலில் நின்று அழ வேண்டி யிருக்கும் போது, ஏதோ சாதித்துவிட்டோம் என்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இழக்கப்பட்டு போனவர்களைப் பற்றி நாம் எவ்வித அக்கறை கொள்ளாதவர்களாகத் காணப்படுகிறோம். ஆமென். ஆமென். அது சரி. அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். இழக்கப்பட்டுபோனவர்களைப் பற்றி அக்கறை கொள்ளாமல்... “எங்கள் சபை அதைச் செய்கிறபடியால், ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய கூட்டத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம்.” அனைவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தங்கி தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள். இன்று நான் நகரத்தின் மிகப்பெரிய சபைகளில் ஒன்றில் இருந்தேன். அங்கத்தினர்களில் ஒருவர், “இங்கே ஞாயிறு காலை நாங்கள் மூவாயிரம் ஜனங்களைக் கொண்டுள்ளோம்; ஞாயிறு இரவு நாங்கள் அதில் பாதியைக்கூட கொண்டிருப்பதில்லை” என்றார். அவர்கள் அனைவரும் சபைக்கு வருவது தங்களுடைய மார்க்க காரியங்களைச் செய்யவே, மேலும் வீட்டிற்குத் திரும்பிச் சென்று, தொலைக்காட்சியைப் பார்ப்பதும், ஊரைச்சுற்றி வருவதுமாக இருக்கிறார்கள். ஏன், இது ஒரு அவமானம். அது இருதயத்தில் ஏதோ குறைவுபடுவதையே காட்டுகிறது. ஆமென். 39.நான் ஒரு பொதுச் சேவை நிறுவனத்தில் மின் இணைப்புச் சார்ந்த பணியில் (Linesman) இருந்தபோது, ஒரு நாள் மின் விளக்கு ரசீதை (Electric Light Bill) பெற்றுக்கொள்ள ஒரு அறைக்குச் சென்றேன். ஒரு இளம் ஸ்திரீ அஸ்பிரின் (மருந்து) பெட்டியிலே (Aspirin Box) வைத்தால் அடங்கிவிடக்கூடிய அளவுக்கு ஆடைகளை தரித்துக்கொண்டு, வாசலுக்கு வந்து, அவள் தரையில் இங்கும் அங்குமாக நடனமாடிக் கொண்டிருந்தாள். வானொலியில் யாரோ ஒரு நபருடைய பிடில் (fiddle நடனமாடும்போது வாசிக்கப்படும் வயலின் இசை தமிழாக்கியோன்)இசைவாத்தியம்ஒலித்துக் கொண்டிருந்தது. அவள் தரையில் இங்கும் அங்குமாக நடனமாடினாள். “எனக்கு என்ன வேண்டும்?” என்றுகேட்டாள். அதற்கு நான், “மின் விளக்கு ரசீது” என்றேன். அதற்கு அவள், "ஓ" என்றாள். அவள், "நான் அதைக் கொண்டுவருவதற்கு ஆயத்தமாகயிருந்தேன்” என்றாள். இந்நிலையில் அவள் மீண்டுமாக தரையில் இங்கும் அங்குமாக நடனமாடினாள். மேலும் நீங்கள் இதன் காரணமாக இனிமேல் உணவு விடுதியில் சாப்பிடக்கூட முடியாத அளவிற்கு பழைய பூகி-வூகி காரியம் போன்ற ஒருவகையான கொஞ்சம் பழைய கேலித்தனமான இசையை அந்த நபர் வாசிக்கத் தொடங்கினான். அந்த கிறீச்சிடும், தேவபக்தியற்ற... ஓ, என்னே. உலகம் மாசுபட்டதில் ஆச்சரியமில்லை. அவர்களுடைய எண்ணம் முழுவதும் பாலுறவு, அசுத்தமானவை மற்றும் தேவபக்தி யற்ற காரியங்களைப் பற்றியே இருக்கிறது; பிரசங்கிகள் கூட அதை செய்கிறார்கள். ஆமென். இது ஒரு அவமானம். 40. ஜனங்கள் தங்களை பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளவர்கள் என்று அழைத்துக்கொண்டு, பழைய ஆபாசமான கீழ்த்தரமான இசைகளையும் (tunes) மற்றும் அப்படியான காரியங்களையும் கேட்கின்றனர். சகோதரனே, உனக்குள் இருக்கிற பருந்து தன்மைதான் (buzzard) அதனால் போஷிக்கப்படுகிறது; அங்கே உனக்கு தேவனுடைய வார்த்தையை போஷிக்கக்கூடிய பரிசுத்த ஆவி தேவையாய் இருக்கிறது. ஆமென். நான் உங்கள் மேல் கோபம் கொள்ளவில்லை, ஆனால் சகோதரனே, நீ சத்தியத்தை அறிந்திருக்க வேண்டும். ஆமென். அதன் காரணமாகத்தான் உன்னால் ஜெபக்கூட்டங்களை நடத்த முடிவதில்லை; உனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. ஒரே ஒரு காரியத்தில் மட்டுமே ஆர்வம்: அது சபையை சற்றே சிறப்பான விதத்தில் மேம்படுத்துவது, உன்னுடைய ஜனங்களுக்கு உபதேசிப்பது, மேம்பட்ட ஆடைகளை அணிவது, மேம்பட்ட காரை ஓட்டுவது, மேம்பட்ட வேலையைப் பெறுவது, அதிக தசமபாகம் செலுத்துவது. அவ்வளவுதான். மாளிகைகளில் ஜீவிப்பது மற்றும் அதைப்போன்று... ஓ, இரக்கம். தேவனற்ற புறஜாதியார் இயேசு கிறிஸ்துவை அறியாமலேயே ஒரு நாளைக்கு இலட்சத்து நாற்பதினாயிரம் பேர் மரிக்கிறார்கள். மற்ற எல்லா வற்றிற்கும் பணத்தை எல்லா வகையிலும் வாரிக்கொள்கிறீர்கள்; களத்திலுள்ள பரிதாபத்திற்குரிய மிஷனரி தனது ஜீவனையே துறக்கும் வரைக்குமாக, பட்டினியினால் மரித்துக் கொண்டிருக்கிறான். நியாயத் தீர்ப்பு நாளில் அவர்கள் எழும்பி, உங்கள்மேல் குற்றம் சுமத்தி, உங்களை வெளியே அனுப்பிவிடுவார்கள். அவர்களுடைய சாட்சியம் இவர்களைக் குற்றப்படுத்தும். ஆமென். பின்னர் பரிசுத்த ஆவியின் முத்திரையைப் பற்றி பேசுங்கள். ஆமென். 41. சரி. அதுதான் காரியம். அவள் தரையில் இங்கும் அங்குமாக நடனமாடினாள், அந்த அற்பமான, ஏதோ ஒரு விதமான பழைய பாடலில், அங்கே நான் நிற்பதைக் கூட அவள் மறந்து, அந்தப் பாடலில் அவள் மிகவுமாக மூழ்கியே விட்டாள். அதன்பின் அவள், “ஓ, என்னை மன்னிக்கவும்” என்றாள். அவள், “நான் நடனமாடுவதை விரும்புகிறேன்” என்றாள். அதற்கு நான், “அது எனக்குப் புரிகிறது” என்றேன். அதன்பின் ரசீதில் கையொப்பம் இட்டுவிட்டு தொடர்ந்து சென்றேன். ஒரு மின் கம்பத்தண்டையிருந்து நான் இறங்கி வந்த சில நிமிடங்களில், நகரத்திலுள்ள ஓர், சிறு குழுவாகிய, அருமையான சபையைப் பெற்ற டாக்டர் பிரவுன், “ஹலோ, பில்லி” என்றார். அதற்கு நான், “ஹலோ, டாக்டர் பிரவுன், இன்று காலை நீர் எப்படி இருக்கிறீர்?” என்றேன். அதற்கு அவர், “நன்றாக இருக்கிறேன்” என்றார். “பில்லி, உம்முடைய கூடாரம் (Tabernacle) எப்படி சென்று கொண்டிருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு நான், "நலமாகவும், அருமையாகவும் சென்று கொண்டிருக்கிறது” என்றேன். அதற்கு அவர், "இன்னும் நல்ல ஜனக்கூட்டம் இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம், ஹு - ஹீ ம்", என்றேன். அதற்கு அவர், “உம் சபையார் மிக நன்றாக உறுதியுடன் நிலைத்திருக்கிறார்களென்று கேள்விப்பட்டேன்” என்றார். அதற்கு நான், "ஆம், தேவனின் கிருபையால்” என்றேன். அதற்கு அவர், “பில்லி, நான் என்ன செய்தேன் தெரியுமா?”, “இங்குள்ள இந்தச்சபை ஐயாயிரம் அங்கத்தினர்களைக் கொண்டுள்ளது” என்றார். மேலும் அவர், “அவர்களில் சிலர் கலிபோர்னியாவில் உள்ளனர், சிலர் எல்லா இடங்களிலும் உள்ளனர்” என்றார். "அது ஐம்பது வருஷமாக இருந்து வருகிறது” என்றார். அவர்களில் சிலர் இறந்துவிட்டனர், மற்றும் அது போன்று, ஆனால் இன்னும் அவர்கள் சபை அங்கத்தினர்களாக உள்ளனர். அது தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் வரை அப்படிதான். “உமக்குத் தெரியுமா?, நான் ஆயிரம் சீட்டுகளை அனுப்பி, ஒரு வருடத்தில் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது, புதன் இரவு ஜெபக் கூட்டத்திற்கு வருவதற்கென உறுதிமொழி எடுப்பீர்களா என்று ஜனங்களிடம் கேட்டேன். அது அவர்களை இரண்டு வாரங்களுக்கு ஒரு ஆராதனையை தவறவிட்டு, வருஷத்தில் ஆறு மாதங்களுக்காவது சபைக்கு வரச்செய்யும்.” “அதற்கு எத்தனை பேர் பதிலளித்தார்கள் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நான், “இல்லை, எனக்குத் தெரியவில்லை” என்றேன். அவள் “ஐந்து” என்றார். அதற்கு நான், “உமக்குத் தெரியுமா?” என்று நான் அவரிடம் இந்த சம்பவத்தை கூறினேன். நான், “நீர் அதைப் பார்த்தீரா, கிளேட்டன் மெக்மிச்சென் (Clayton McMichen) என்ற அந்த நபர், பழைய வைல்ட்காட் (Wildcat - 1950 மற்றும் 1960-களில் தென் அமெரிக்காவின் பிரபலமான ராக் இசைக்குழு தமிழாக்கியோன்) எதையோ வயலினில் வாசித்துக் கொண்டிருந்ததற்கு, அந்த ஸ்திரீ ஏறக்குறைய துணியே இல்லாமல் தரையில் இங்கும் அங்குமாக நடனமாடிக் கொண்டும், டூடுள்-டீ, டூடுள்-டீ, டூடுள்-டீ அது போல உரக்க கத்திக்கொண்டும் இருந்தாள் என்றேன். நான், “நீர் நினைக்கிறீரா... அன்று இரவு அங்கே, வானொலியண்டைச் சென்று, வானொலியில் அவனுக்கு ஒரு முத்தத்தை வீசிவிட்டு, 'பிரியாவிடைபெறுகிறேன் அன்பே, ப்ரயர் பாட்சில் (Brier Patch) அல்லது அது என்னவாயிருப்பினும் உன்னை சந்திக்கிறேன்' என்று கூறினாள்” என்றேன். நான், “அவள் அங்கே வருவதற்கு திருவாளர். மெக்மிச்சென் சீட்டில் கையொப்பமிட வைக்க வேண்டுமென்று நீர் நினைக்கிறீரா? அங்கு செல்வதற்கு அவள் உடுத்தியிருந்த ஆடையைக் கூட அடகு வைப்பாள். சரி! ஏனென்றால் அவளுடைய இருதயத்தில், அது இல்லாமல் அவளால் ஜீவிக்க முடியாது” என்று கூறினேன். மேலும் நான், “நீர் அந்த வெதுவெதுப்பான ஒரு கூட்ட சபை அங்கத்தினர்களை பீடத்திற்கு அழைத்துச் சென்று, பரிசுத்த ஆவியானவர் அவர்களின் ஆத்துமாவை அனல்மூட்டும் வரை, அவர்கள் ஜெபிக்கும்படி செய்யும், அங்கே சீட்டுகளில் கையெழுத்திட வேண்டியதே இருக்காது” என்றேன். தேவன் அவர்களின் இருதயத்தில் இருக்கிறார், தேவன் சபைக்குச் செல்கிறார். அவர் தொழுதுகொள்ளுதலை நேசிக்கிறார். ஆமென். “நல்லது”, “அது மெதடிஸ்டுக்கள், பாப்டிஸ்டுக்கள்”, என நீங்கள் கூறலாம். அது பெந்தெகொஸ்தேயினரும் தான். ஆமென். அது சரி. அங்கேதான் காரியம். 42. “அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டழு கிறவர்கள் மேல் முத்திரைபோடு.” மற்றவர்கள் வராதீர்கள் இவர்கள் அருகில் வராதீர்கள். அவர்கள் மிகுந்த பக்தியுள்ளவர்களாயிருந்தனர். ஆனால் அவர்கள் அருகில் செல்ல வேண்டாம்; அவர்களை அப்படியே விட்டு விடுங்கள். அவர்களுக்கு அக்கறை கிடையாது, என் கிரியைகளில் அவர்களுக்கு பற்றுதல் இல்லை; இப்போது எனக்கு அவர்கள் மீது அக்கறை இல்லை.” தேவன் அவர்களுக்கான வாய்ப்பை அவர்களுக்கு கொடுத்தார், அவர்களோ அதற்குச் செவிகொடுக்கவில்லை, எனவே தொடர்ந்து செல்லுங்கள். அவ்வாறே அது நிறைவேறியபோது, பிறகு தூதர் அனைவரும் திரும்பி வந்து, “நகரத்தின் பாவத்தினிமித்தம் பாரப்பட்டுப் பெருமூச்சுவிட்டழுகிற ஒவ்வொருவரையும் முத்திரையிட்டோம்” என்றார்கள். அதற்கு அவர், “சரி இப்பொழுது, வெட்டுகிற ஆயுதங்களுடைய தூதர்களே, நீங்கள் முன்னோக்கிச் சென்று எல்லாரையும் சங்கரித்துக் கொன்று போடுங்கள்” என்றார். அது நிறைவேறியது. 43. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட அந்நாளிலே, திரும்ப அனுப்பப்பட்டு... அவர், "நீ... என்னை தூஷிப்பாயானால், உனக்கு மன்னிக்கப்படும், ஆனால் நீ பரிசுத்த ஆவியை தூஷிப்பாயானால், அது ஒருபோதும் மன்னிக்கப்படாது.” ஏனெனில் ஜனங்கள் இன்னும் முத்திரைப்போடப்படாதிருந்தனர்; தேவனுடைய கிரியை இன்னும் முடியாதிருந்தது; பலியானது செலுத்தப் படாதிருந்தது; இயேசுவானவர் சிலுவையில் அறையப் படாதிருந்தார்; பரிசுத்த ஆவியானவர் வராதிருந்தார். ஆனால் பெந்தெகொஸ்தே நாளின்போது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டானது, நகரத்திலே நடந்த அருவருப்பு களினிமித்தம் பெருமூச்சுவிட்டழுது கொண்டிருந்த அந்த யூதர்கள்... அவர்கள் ஒரு மேல்வீட்டில் அனைவரும் ஒருமனப்பட்டிருந்து, “என் சபை உன்னுடையதை விட சிறந்தது. நான் - நான் இங்கிருக்கும் இதைச் சேர்ந்தவன், மற்றும் எங்கள் சபையில் மிகச் சிறந்த ஜனங்கள் உள்ளனர்” என்று கூறிக்கொண்டிருக்கவில்லை. அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களாய், அனைவரும் ஒரே இடத்தில் அந்த எழுப்புதலில் ஒருங்கிணைந்திருந்தனர். ஏனெனில், அவர்கள் ஏதோவொன்றின் வாக்குத்தத்தத்தை பெற்றிருந்தனர். தேவன் தம்முடைய ஜனங்களை ஒன்றுசேர்த்தார். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்கள் வீதிகளில் சென்று, அப்பொழுது அறியாத பாஷையை பேசவில்லை; தேவன் அவர்கள் ஒவ்வொருவரிலிருந்தும் ஒரு பிரசங்கியை உண்டுபண்ணினார். அவர்கள் புறப்பட்டுப் போய் தான் சொன்னவைகளையெல்லாம் அவரவர்கள் கேட்கும்படியான ஒரு பாஷையிலேயே பிரசங்கித்தார்கள். அது சரி. அவர்கள் அங்கு சென்று ஒவ்வொரு பேச்சுவழக்கிலும் பிரசங்கித்தபோது, அதை தேவனே செய்ய வேண்டியிருந்தது. அவர் அதைச் செய்யக்கூடிய நாள் அதுவாயிருந்தது. நீங்கள்... “எருசலேமிலிருந்து சுவிசேஷம் புறப்பட தொடங்கும். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்.” அது எருசலேமிலிருந்து தொடங்கி, யூதரிடத்திற்கும், பின்பு சமாரியரிடத்திற்கும், அதன்பின் புறஜாதியாரிடத்திற்கும் போனது. தேவனால் அதைச் செய்ய முடிந்த ஒரே வழி அதுதான். அதில் எவ்வித குழப்பங்களும் இல்லை, இல்லை. அது பாபிலோனிலிருந்து மிகவும் வேறுபட்டது. பாபிலோனில், அவர்களால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும்படியாக, இங்கே அவர் பாபிலோனை செவ்வையாக்கினார். தேவன் செவ்வையாக்க வேண்டிய நேரம் இன்றுதான் என நான் நினைக்கிறேன், மனுஷர் தங்கள் இருதயங்களை செவ்வையாக்கும்படி தேவனை அனுமதிக்கும் போது, அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும். ஆமென். ஆமென். தேவனே, இரக்கம் பாராட்டும். 44. ஓ, நண்பர்களே, நான் உங்களை நேசிக்கிறேன்; ஆனால் பாருங்கள், நாம் வார்த்தைக்கு திரும்ப வேண்டியதாய் உள்ளது. அது சரி. அதற்கு நீங்கள், “சகோதரன் பிரன்ஹாமே, உங்களுக்கு (அந்நியபாஷை தமிழாக்கியோன்) பேசுவதில் விசுவாசமில்லையா?” என கேட்கலாம். நிச்சயமாக, நான் அந்நியபாஷைகளில் பேசுவதை விசுவாசிக்கிறேன். ஆனால் நீங்கள் அதை அதன் ஸ்தானத்தில் வைக்க வேண்டும். நான் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கிறேன். நிச்சயமாக, நீங்கள் அதை அதன் ஸ்தானத்தில் வைக்க வேண்டும். நான் சத்தமிடுவதை விசுவாசிக்கிறேன், நிச்சயமாக, அதை அதன் ஸ்தானத்தில் வையுங்கள். அவை எல்லாம் அதனதன் ஸ்தானத்தில் வைக்கப்பட வேண்டியுள்ளது. அது சரி. ஆனால் நாம் அதை அதன் ஸ்தானத்திலிருந்து மாற்றுகிறோம். ஆமென். அது மிக மிக மோசமானது. ஆனால் ஒரு விசை சற்றே ஆராய்ந்து பார்த்து, அது உண்மையா இல்லையாவென்று பாருங்கள். 45. கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் வரும்போது, தேவன் அந்த ஜனங்களை தேவனுடைய ராஜ்யத்திற்குள் முத்திரை போட்டார். "இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்” என்று அங்கு நின்றுகொண்டிருந்த யூதர்கள் அவர்களைப் பார்த்து நகைத்து, அவர்களைப் பரியாசம் பண்ணினார்கள். அவர்கள் கவலை இல்லாத மனதோடு வெளியே வந்தனர், எல்லா பயமும் அவர்களை விட்டு நீங்கியது, அவர்களின் இருதயங்கள் கொழுந்து விட்டெரிந்தன, தேவனுடைய அன்பினால் எரிந்து கொண்டு, அவர்களால் அவர்களுடைய பாஷையைக்கூட பேச முடியாத நிலையில், தேவன் அவர்கள் மூலமாக ஜனங்களிடம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றி பிரசங்கித்தார். தேவன்தாமே பேசுகிறார்... மேலும் ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே பாஷைகளிலே அவர்களுக்குச் செவிகொடுத்துக் கொண்டிருந்த ஜனங்களின் பாஷையை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்திக்கொடுத்து, ஜனங்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். பேசினார்கள். 46. பெந்தெகொஸ்தே நாளில், எங்கே அந்நியபாஷைகள் பாபிலோனில் குழப்பத்தை ஏற்படுத்தியதோ, அவர் அவர்களை மீண்டுமாக பெந்தெகொஸ்தேவில் ஒரே ஐக்கியத்திற்குள்ளாக கொண்டுவந்தார். பாபிலோனில் பிசாசு என்ன செய்தானோ அது சகோதரத்துவத்தை சிதறடித்தது, பெந்தெகொஸ்தே நாளில் தேவன் சகோதரத்துவத்தை ஒன்றுசேர்த்தார்; பரிசுத்த ஆவியானவர்தாமே ஜனங்களின் மூலமாக, ஜனங்களுடன் பேசினார். மீண்டுமாக, அவர்கள் வியந்து, “நல்லது, அதைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நாங்கள் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, அதைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டனர். அவர்களில் சிலர், “ஹா ஹா ஹா, இன்று பெர்ஷிங் சதுக்கத்தில் (Pershing Square - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள ஒரு பகுதி - தமிழாக்கியோன்) நாங்கள் அதைக் கேட்டோம்” என்று கூறுகிறார்கள், அது இன்னுமாக பாபிலோனாகவே இருக்கிறது. அவர்கள், “ஏன், அவர்கள் அனைவரும் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். சகோதரனே, நீ அங்கே என்ன செய்திருக்கிறாய் என்று கவனி. தேவன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார், அவர்கள் அதை மறுத்து, அதை நிராகரித்தனர். 47. பவுல் பிரசங்கித்துக் கொண்டே வந்தான்; பேதுரு, யாக்கோபு, யோவான், அனைவரும்: பரிசுத்த ஆவியின் அபிஷேகம், தேவனின் முடிக்கப்பட்ட கிரியைகள், ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்னும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர். அதை ஏற்றுக்கொண்டு அழுத ஒவ்வொரு யூதனையும் தூதன் அடையாளமிட்டுவிட்டார். பவுல் கூறியதை கவனியுங்கள், “நான் ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை, ஆனால் இரவும் பகலும் கண்ணீரினால் உங்களை எச்சரித்து, பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், உங்களுக்குப் பிரசங்கித்தேன்.” என்றான். அதை நோக்கிப் பாருங்கள். தங்கள் முழங்கால்களில் நிற்கும் இன்னும் அதிகமான மனுஷர்தான் இன்று நமக்கு தேவையாயிருக்கிறது, இவ்விதமான உலர்ந்த கண்களோடு (கண்ணீர் சிந்துதல் இல்லாமல் தமிழாக்கியோன்) அறிக்கை செய்கின்ற சிலரை அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவரின் ஒரு உண்மையான நற்பிறப்பாய் இருக்க வேண்டும். இன்றிரவு ஜான் ஸ்மித் (John Smith) உயிர்த்தெழுந்து நமது பாப்டிஸ்ட் சபை அது இருக்கும் நிலையை பார்க்க முடிந்தால் என்ன நினைப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஜான் ஸ்மித் இரவு முழுவதும் ஜெபித்து, காலையில் அவரது கண்கள் வீங்கி மூடிக்கொள்ளும் வரை அழுதார்; அவருடைய காலை உணவை உண்பதற்காக அவருடைய மனைவி அவரை மேஜைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதாய் இருந்தது. அழுது கொண்டு! அவ்வாறு செய்கின்ற ஒரு பாப்டிஸ்ட் பிரசங்கியை இன்றிரவு நாம் எங்கே கண்டுபிடிப்பது? அலெக்சாண்டர் காம்ப்பெலை (Alexander Campbell) குறித்து என்ன? மெதடிஸ்டாகிய உங்களுக்கு, ஜான் வெஸ்லியைக் (John Wesley) குறித்து என்ன? இப்போது, பெந்தெகொஸ்தே பிரிவினராகிய உங்களுக்கு, அசூசா வீதியைக் (Azusa Street) குறித்து என்ன? தொடக்கத்தில் நடந்ததை குறித்து என்ன, நீங்கள் அங்கே சென்று எல்லோரும் ஒருமனப்பட்டவர்களாய், ஒரே இடத்தில், பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் தேவன் கிடத்தி இருக்கும் வரை ஜெபித்தீர்கள் அல்லவா? உங்களால் ஒரு பாடல் புஸ்தகம் கூட வைத்திருக்க முடியவில்லை; அது உங்களுக்கு மிகுந்த கஷ்டம் என்று நீங்கள் கூறினீர்கள். நீங்கள் வர்ணம் பூசப்பட்டும், அலங்கரிக்கப்பட்டும், இடம் விட்டு இடம் ஓடியும், தங்கள் மார்க்கத்தானாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருப்பதையும் பார்த்து இன்று அசூசா வீதி அதைப்பற்றி என்ன கூறும்; அது அந்த பரிசுத்தவான்களுக்கு அவமானமாய் இருக்கும். ஆமென். அது சற்று கடினமான ஒன்றுதான் என்று எனக்கு தெரியும், ஆனாலும் சகோதரனே, அதுதான் சத்தியம் ஆமென். 48. இப்பொழுது, அப்போதுதான் யூதர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள். அதைக் கேட்கும்படியான வாய்ப்பைப் பெற்ற அந்த ஜனங்களுக்கு, தாங்கள் என்ன பேசுகிறாம் என்று கூட தெரியாத பிரசங்கிகள் மூலம், ஊக்கமளித்தலின் கீழிருந்த அவர்கள் மூலமாக தேவன் பேசி, அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அவர்கள் அந்த யூதர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள், அவர்களோ அதை நிராகரித்தார்கள். தேவன் சுவிசேஷத்தை ஏறக்குறைய கி.பி. 33 முதல் கி.பி. 96 வரை பிரசங்கித்தார்; இன்னமும் யூதர்கள் அதை நிராகரித்துக்கொண்டிருக்கின்றனர். தேவன் புறஜாதிகளிடத்திற்குத் திரும்பினார், அதன் பின் தூதனுடைய இரக்கமானது -இரக்கத்தின் தூதன் அந்த யூதர்கள் அனைவரையும் விட்டுவிலகி, அவர்களில் ஒருவன் புறஜாதி சபைக்குச் சென்றான்; பவுல், “இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். அவர்கள் அதைக் கேட்பார்கள்” என்று கூறி, புறஜாதிகளுக்குப் பிரசங்கிக்கச் சென்றான். அதன்பின் மகத்தான நேரம் வந்தபோது, பெரிய சபைகளின் சம்மேளனம் அனைத்தும் ஒன்றுகூடி நகரத்துக்குள் சென்றது, தீத்து நகரத்தை முற்றிக்கையிட்டு, அவர்கள் பட்டினியால் சாகும்படியாகவும், அவர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளை வேகவைத்து உண்ணும் வரையிலும், பல ஆண்டுகளாக... இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அவர்களை அங்கே வைத்திருந்தான். எசேக்கியேல் உரைத்தது நிறைவேறும்படியாக, அவர்கள் ஒன்றுக்கும் இரங்காமல், அவர்கள் உள்ளே வரும்போது அவர்களை வெட்டினர். முற்றிலுமாக அழிக்கப்பட்டு, இரத்தம் வழிந்தோடினது; நகரம் தீக்கிரையாக்கப்பட்டது; ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு ஆயிற்று, ஏனெனில் தேவன் கல்வாரியிலிருந்து செய்து முடிக்கப்பட்ட கிரியையை அனுப்பினார், அதற்குச் ஜனங்கள் செவிக்கொடுக்க மறுத்தனர், ஆதலால் பிசாசு அவர்களின் செவியை குத்தினான்; அவர்கள் இன்றும் அந்த விதமாகவே இருக்கின்றனர். ஆமென். 49. அதற்கு நீங்கள், “அது... இப்போது, புறஜாதியாரைக் குறித்து என்ன” என்று கேட்கலாம். இங்கே வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரத்திற்கு திருப்பி, இந்த நாளுக்கான புறஜாதியாரை பற்றின தீர்க்கதரிசனம் எங்கே உரைக்கப்பட்டுள்ளது என்று பார்ப்போம். கவனியுங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரத்தில், புறஜாதி சபைக்கு தீர்க்கதரிசனம் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று,... பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்... அந்த நான்கு தூதரையும் நோக்கி.. நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும். நான்கு காற்றையும் பிடித்திருந்து. முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர். கோத்திரங்களில்... தாண் கோத்திரங்களில்... பன்னீராயிரம்... ஆசேர் கோத்திரங்களில்... பன்னீராயிரம்... ...கோத்திரங்களில்... செபுலோன்... பன்னீராயிரம்... (பன்னிரண்டு இஸ்ரவேல் கோத்திரத்தார். பன்னிரண்டை பன்னிரண்டால் பெருக்கினால் லட்சத்து நாற்பத்து நாலாயிரம், எல்லோருமே இஸ்ரவேல் புத்திரர்கள்) 50. கவனியுங்கள். நீங்கள், “சகோதரன் பிரன்ஹாமே, அந்த முத்திரை என்றால் என்ன?” என்று கேட்கலாம். நேற்றிரவு யாரோ ஒருவர்... இப்போது, அந்த முத்திரை உங்களுடைய தலையின் மேல் பச்சை (tattoo) குத்தப்பட்டிருக்கும், தேவனின் முத்திரை உங்களுடைய தலையின் மேல் பச்சை குத்தப்பட்டிருக்கும் என்று வானொலியில் கூறின சகோதரனே, உம்மிடம் கேட்கிறேன். முதலில் தேவனின் முத்திரை என்பது என்ன? தேவனுடைய முத்திரை என்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகமாகும், அது உன்னுடைய இருதயத்தில் உள்ள ஒரு அடையாளமேயன்றி, உன்னுடைய தலையில் உள்ள ஒரு அடையாளமல்ல. ஆமென். ஏதோ ஒரு குறிப்பிட்ட அடையாளமல்ல, விசுவாச துரோகமே உன்னை முத்திரையிடுகிறது. உன்னுடைய சொந்த கிரியைகளே நீ யார் என்பதை நிரூபிக்கின்றன. "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்." அவர்கள் கிறிஸ்துவை மறுதலிப்பவர்களேயானால், கிறிஸ்துவை நிராகரிப்பவர்களேயானால், அவர்கள் பிசாசினால் விசுவாச துரோகத்தில் முத்திரையிடப்படுகிறார்கள். அவர்கள் தேவ பயமுள்ளவர்களாகவும், தேவனை நேசிப்பவர்களாகவும், மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாகவும் இருந்தால், அவர்கள் பரிசுத்த ஆவியால் நித்திய நித்தியமான சேருமிடத்திற்கு (eternal destination) முத்திரையிடப்படுகிறார்கள். ஆமென். சகோதரனே, நான் இதை நேசிக்கிறேன்; இது எனக்கு மாத்திரமே. ஆமென். இத்தனை வருஷங்கள் என்னை காத்துக்கொண்டது, இன்றிரவு அதை நான் நேசிக்கிறேன்; நான் இரண்டு மடங்கு அதிகமாக பெற்றுக்கொள்ளும் படியாக, நான் இப்போது இருப்பதை காட்டிலும் இரண்டு மடங்கு அளவில் பெரிதாக இருக்க வேண்டுமென்று மட்டுமே நான் விரும்பினேன். ஆமென். அது எனக்கு ஜீவன்... 51. ஓ, இப்போது இங்கே பாருங்கள். மேலும் அவன், "இப்போது, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று கொண்டு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருந்தார்கள்” என்றான். வேதாகம மொழி பெயர்ப்பாளர்கள் இங்கு யாராவது இருக்கின்றீர்களா? வேதத்தில் “காற்றுகள்” என்பதன் அர்த்தம் என்ன? “காற்றுகள்” என்றால் “யுத்தங்கள், சச்சரவு, தொல்லைகள்” என்று பொருள்படும். முழு உலகமும் எப்போது யுத்தத்திற்கு சென்றது? அந்த ஒரு முறை, ஒரு முறையே முழு உலகமும் யுத்தத்தில் இருந்தது; அதுவே முதலாம் உலகப் போர், எல்லா நாடுகளும் ஒன்றாக அணிவகுத்துச் சென்ற காலம். இந்த உலக யுத்த காலத்தை பற்றி அவன் என்ன கூறினான் என்று பாருங்கள். எல்லா தூதர்களும் வந்து, சங்காரத்தூதன் உலகத்தை யுத்தத்தால் சங்கரிக்கும்படியாக... உங்களுக்கு புரிகிறதா? நிர்மூலமாக்கும் ஆயுதங்களுடன் தேவதூதர்கள் உலகை நிர்மூலமாக்க புறப்படுகிறார்கள்... மேலும் பரிசுத்த ஆவியானவர் என்ன கூறினார்? “நான்கு காற்றுகளையும் பிடித்திருங்கள் (இந்த உலகளாவிய பேரழிவை, உலக யுத்தத்தை பிடித்திருங்கள்), நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றியில் முத்திரை போட்டுத் தீருமளவும், அது வரையிலும் பிடித்திருங்கள்.” புறஜாதியார் ஒருபோதும் ஊழியக்காரனாக இருந்த தில்லை; யூதனே ஒரு ஊழியக்காரனாக இருக்கிறான். யூதரில் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேராகிய அவர்கள் ஒவ்வொருவரையும் யோவான் அடையாளம் கண்டுகொண்டான். 52. பாருங்கள், தேவன் இப்போது சற்றே தாமதப்படுத்தி, “இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்களை முத்திரை போட்டுத்தீருமளவும், இந்த யுத்தங்களை இங்கே பிடித்திருங்கள்; முழுமையான அழிவை, முழுமையான நிர்மூலமாக்குதலை அனுமதிக்காதீர்கள்” என்று கூறுகிறார். அதன்பின் அந்த நேரத்தில்... ஓ, என்ன நடந்தது என்று பாருங்கள். முழு உலகமும் போருக்குச் சென்றது; திடீரென்று அது நின்று போனது. முதலாம் உலக யுத்தம் விலக்கப்பட்டதை நான் வாசித்திருக்கிறேன். அது ஏன் நின்று போனது என்று இன்றுவரை ஒருவனும் அறியான்; அதை நிறுத்தும்படி எந்த ஒருவனும் கட்டளையிடவில்லை. ஆனால் அது வருஷத்தின் பதினோராவது மாதமான நவம்பர் பதினோராம் தேதி (அது சரிதானே?), அந்நாளின் பதினோராம் மணி வேளையில், பதினோராம் மணி பதினோராம் நிமிஷத்தில் அது நின்று போனது. அது என்ன? பதினோராம் மணி வேளையின் ஜனங்கள் உள்ளே வருவதற்காகவே. அவர் "சிலர் ஒன்றாம் மணி வேளையிலும், மற்றும் அதன் பிறகும் வந்து ஒரு பணம் பெற்றனர் என்றார். பதினோராம் மணி வேளையின் ஜனங்களும் ஆரம்பத்தில் கிடைத்த அதே ஒரு பணம் பெற்றனர். பதினோராம் மணி வேளையின் ஜனங்கள்... மேலும் அதனோடு அந்நேரத்தில், யோவான் ஒவ்வொரு யூதனையும் அடையாளம் கண்டுகொண்டான்; அவர்களின் இராணுவ அந்தஸ்தை அவன் அறிந்திருந்தான்; கோத்திரம் வாரியாக அவர்களின் பெயர்களை அவன் அறிந்திருந்தான் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். யோவான் ஒரு யூதனாதலால், அவன் “இவர்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரர்கள்” என்றான். இவைகளுக்குப்பின்பு (9-வது வசனம்), “நான் பார்த்தபோது, இதோ சகல ஜாதிகளிலும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்.” அவர்கள் எப்போது அடையாளமிடப்பட்டனர் என்ற நேரமில்லை. 53.இஸ்ரவேலாகிய யூதர் இப்பொழுதே முத்திரையிடப்படத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் இப்போது அதோ அங்கிருக்கிற எருசலேமிலே இருந்து கொண்டு, யாரோ ஒருவர் வந்து இயேசுவே கிறிஸ்து என்பதை அவர்களுக்கு ரூபகாரப்படுத்தும்படியாக அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது சரி. நீங்கள் அவர்களுக்கு ஒருவித உணர்ச்சியற்ற வேத சாஸ்திரத்தை கற்பிக்க முடியாது; யூதர்கள் அடையாளங்களைத் தேடுகிறார்கள்; அவர்கள் அடையாளக் கிரியை செய்யும் ஒரு ஊழியத்தை கண்டுபிடிக்க வேண்டும், அப்படியில்லை என்றால் அவர்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள். ஸ்டாக்ஹோம் சபை (Stockholm Church) அவர்களுக்கு ஒரு மில்லியன் (பத்து லட்சம்-தமிழாக்கியோன்) வேதாகமங்களை அனுப்பியது. அவர்கள் அதை புரட்டி, வாசிக்கத் தொடங்கி, "இந்த நசரேயனாகிய இயேசுதான் மேசியா என்றால், அவர் தீர்க்கதரிசியின் அடையாளத்தைச் செய்கிறதை நாங்கள் காணட்டும், அப்பொழுது நாங்கள் அவரை விசுவாசிப்போம்” என்றார்கள். அந்த மணி வேளைக்கு காத்திருந்து... மேலும் சகோதரனே, யூதர்கள் கவிசேஷத்தைப் பெறும்போது, புறஜாதியாரின் நாள் முடிவடைந்திருக்கும். தேவன் யூதரிடம் திரும்பிச் செல்வது நிச்சயம். 54. இப்போது, நீங்கள் இதை ஒரு நிமிடம் கவனிப்பீர்களானால்... கவனியுங்கள். இந்த ஜனங்கள் வந்த போது, இதற்குப் பிறகு, நிச்சயமான நேரம் இல்லை... இவைகளுக்குப்பின்பு. நான் பார்த்தபோது. இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று. சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: ஆமென், ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; என்றார்கள் 55. அது பழைமையான பரிசுத்த ஆவியானவரின் கூட்டம் இல்லையென்றால். நான் என் ஜீவியத்தில் ஒருபோதும் அப்படியான ஒன்றை கண்டதே இல்லை. சரி! யார் இந்த திரளான கூட்டமாகிய ஜனங்கள்? யூதர்கள் முத்திரையிடப்படுகிற காலங்களுக்கிடையில், முன்கூட்டியே, யோவான் அவர்களைப் பார்க்கிறான்... ஆனால் இந்த நேரத்திற்கிடையில் (அவர்கள் முத்திரையிடப் பட்டதற்கான நேரம் குறிக்கப்படவில்லை), ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்கே அசூசா வீதியில் பரிசுத்த ஆவி விழத்தொடங்கி, அது உலகம் முழுவதும் பல்வேறு திசைகளுக்கு சென்று, தேவனின் பண்டைய பாணியிலான அப்போஸ்தல ஆசீர்வாதங்கள் அவர்கள் மேல் தங்கினது. சிறிது காலத்திற்கு முன்பு தேசம் முழுதும் விரைந்து பரவிய அந்த மகத்தான எழுப்புதலிலிருந்துதான் அந்த வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற பரிசுத்தவான்கள் வந்தார்கள்; மேலும் இப்போது நாம் வெதுவெதுப்படைந்து, வலுவிழந்து விட்டோம், தேவன் யூதர்களிடம் திரும்பப் போகிறது நிச்சயம். ஜனங்கள் பரிசுத்த ஆவியை நிராகரித்தனர்; அதை கேலி செய்து பரிகசிக்கிறார்கள். அதைப் பெற்றிருப்பது போலவே பாசாங்கு செய்துகொண்டே ஜனங்கள் போகிறார்கள். மேலும் சபையானது உலகப்பிரகாரமான சபையின் மாதிரியைப் பின்பற்றுகிறது. முன்பு அவர்கள் வித்தியாசமாக உடுத்தி வெளியே செல்வர். நான் உங்களுக்கு சொல்கிறேன், இப்போதெல்லாம் நீங்கள் பீடத்திற்கு ஜனங்களை வரவழைக்க முடியாது. முன்பெல்லாம் ஜனங்கள் சபைக்கு வந்து.., “பாரும், என்னிடமில்லை..." 56. இங்கே சிறிது காலத்திற்கு முன்பு ஒரு ஸ்திரீ எனக்காக ஒரு பாடற்குழுவில் பாடப் போவதாக இருந்தாள். அவள் தலைமுடிக்கு இரசாயனக் கரைசலைப் பயன்படுத்தி சிகையலங்காரம் செய்ய முடியவில்லை (Kinky manicures) என்பதனால் அவள் வரவில்லை என்று சொன்னாள். அவள் ஒரு பாடற்குழுவில் பாட வேண்டியிருந்தது. அதை நான் கேள்விப்பட்டு, அதற்கு நான், "நீ விரும்பினாலும் இப்போது உன்னால் பாட முடியாது” என்றேன். அது சரி. சகோதரனே, ஒரு மனிதன் என்னுடைய பிரசங்க பீடத்தின் பின்னால் வருவதற்கு முன்பு அவன் நிரூபிக்கப்பட வேண்டும்; நான் இதை விசுவாசிக்கும் ஒரு பண்டைய பாணியிலான பிரசங்கி. நீ இன்றிரவு இங்குள்ள தோன்றி மறைகிற சந்தோஷத்தை தேடும் உணவு விடுதியில் (roadhouse) கிட்டார் (guitar) வாசித்துக்கொண்டிருக்கும் சில நபர்களை அழைத்து வந்து, நாளை இரவு பீடத்திற்கு வந்து, அடுத்த இரவு சுவிசேஷத்தை பிரசங்கிக்கச் செய்கிறாய்; இது பரிசுத்த ஆவியானவருக்கு ஒரு அவமானமாயிருக்கிறது. ஆமென். யோவான், “மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்” என்றான். பின்விளைவுகள் எதுவா யிருப்பினும் அதைக்குறித்துக் கவலை கொள்ளாமல், சுவிசேஷத்தைச் சமரசமின்றி நிலையுறுதியுடன் எடுத்துரைக்கின்ற யோவானைப் போன்ற இன்னும் சில பாப்டிஸ்ட் பிரசங்கிகள் நமக்கு தேவையாய் இருக்கின்றனர். ஆமென். நாம் சபையில் ஹாலிவுட்டைப் பெற்றுள்ளோம், அது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் அங்கிருந்து தகர்த்தெறியப்பட வேண்டும். அதுதான் சத்தியம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பரிசுத்த ஆவியானவரின் சபை, உடை உடுத்துதலும், நடந்து கொள்ளும் விதமும், ஏன் அது ஒரு பயங்கரமான இடத்திற்கு வந்துவிட்டது. பிரசங்கிகளை மேடைக்கு அழையுங்கள்; அவர்கள் ஜெபிக்க பீடத்திற்குச் செல்வார்கள், அவர்களால் அதைச் செய்ய முடியாது; அவர்கள் நூற்றைம்பது டாலர்கள் உடைக்காக செலவழித்து, தங்களுக்கென பிரத்தியேகமாக வெட்டித் தைத்த, நேர்த்தியான மடிப்புள்ள உடைகளைக் கொண்டிருப்பதால் (creased up), அவர்களால் குனியக்கூட முடியாது. ஆமென். அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். 57. ஐந்து... ஐம்பது டாலர் மேற்சட்டையை உன்மேல் போர்த்திக்கொண்டு, நூறு டாலர் ஆடையை அணிந்து கொண்டு, வர்ணம் பூசப்பட்ட விரல் நகங்களுடன் இருக்கும் ஸ்திரீயே; உன்னால் மண்டியிட முடியாது. நீ பிள்ளைகளைக் கூட பெற்றுக்கொள்ளாமல், கருத்தடை செய்து, ஏதோ திமிர்பிடித்த (snotty-nosed) நாயை தூக்கி வைத்துக்கொண்டு, அதை ஏதோ ஒன்று சொல்லி கூப்பிட்டுக்கொண்டு, குழந்தையின் பாசத்தை அதற்குக் கொடுக்கிறாய். பின்னர் உன்னை நீ பரிசுத்த ஆவியானவரின் சபையென்று அழைக்கிறாயே! உன்னைப் பற்றி நீயே வெட்கமுற்று, மனந்திரும்ப வேண்டும்! ஆமென்! அது தான் உண்மை. பரிசுத்த ஆவியைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் இந்த கூட்டமும், பெந்தெகொஸ்தே சபையைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் இந்த ஜனக்கூட்டமும், இங்கே பீடத்திற்கு வந்து, தேவன் இறங்கி வந்து பரிசுத்த ஆவியை உனக்குத் தரும்வரை அதன் கீழ் துக்கித்துப் புலம்ப வேண்டும், இன்றிரவு நமக்கு அதுதான் தேவைப்படுகிறது. அல்லேலூயா! ஆமென்! அதுதான் இன்றிரவு நமக்குத் தேவையாயிருக்கிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, பெந்தெகொஸ்தே ஆள்மாறாட்டக்காரர்களே; பீடம் திறந்திருக்கிறது. பீடத்திற்கு வரும் பாதை தயாராக உள்ளது. ஆமென். உங்களுக்கு ஒரு எழுப்புதல் வேண்டுமென்றால், அதை உங்களுடைய சொந்த ஆத்துமாவிலிருந்து தொடங்கு வீர்களாக. ஆமென். பாபிலோனுக்கு பின் சென்று, மற்ற சபைகளைப் போலவே செயல்பட்டு, பழைய கூட்டாளிகளோடும், ஒன்றுவிட்ட சகோதரனுடனும் சுற்றிக்கொண்டு, ஆள்மாறாட்டம் செய்வது வெட்கக் கேடானது. ஆமென். நண்பர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதுதான் உண்மை என்று உங்களுக்கு தெரியும். 58. நான் இரண்டு மணி நேரம் பிரசங்கிக்கிறேன் என்று என்னிடம் கூறினார்கள். இன்றிரவு மீண்டுமாக அதைச் செய்தேன். சகோதரனே, நான் உங்களுக்கு ஒன்றை கூறட்டும். அதுதான் சத்தியம். நீங்கள் ஒன்று அதற்குள்ளாக அடையாளமிடப்பட்டிருக்க வேண்டும் அல்லது புறந்தள்ளப்பட்டு வெளியே அடையாளமிடப்பட்டிருக்க வேண்டும். இன்றிரவு நீங்கள் சிறிதளவாயினும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்து, நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களானால்; இங்கே பழைய பீடத்திற்கு வரும் பாதையும், துக்கங்கொண்டாடு பவருடைய (mouner) இருக்கையும் இங்கே உங்களுக்காக உள்ளது, தேவன் இறங்கி வந்து பரிசுத்த ஆவியினால் உங்களை நிரப்பும் வரைக்குமாக, நீங்கள் இங்கே தரித்திருந்து பிரசவ வேதனைப்படுவதுபோல், துக்கித்துப் புலம்பவும் செய்வீர்களாக. ஆமென். அல்லேலூயா! "நீர் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறீர்” என்று நீங்கள் சொல்லலாம். “அசூசா வீதியைப் பற்றி உமக்கு எப்படித் தெரியும்? உமக்கு ஐம்பது வயது கூட ஆகவில்லை; நீர் அசூசா வீதியைப் பற்றி என்ன பேசுகிறீர்?”, என்று கேட்கலாம். எனக்கு அதிகம் தெரியாதென்று அறிவேன், ஆனால் எல்லாவற்றையும் அறிந்த ஒருவரை எனக்குத் தெரியும், அவரால் நம்மிடம் சொல்ல முடியும் அல்லேலூயா! அதனால்தான் பெந்தெகொஸ்தே சபைக்கு ஒரு பரிசுத்த ஆவியின் எழுப்புதல் தேவையாய் இருக்கிறது என்பதை நான் அறிவேன், ஒரு கூட்ட (தெளிவற்ற வார்த்தை) அல்ல, ஒரு கூட்ட இசை அல்ல, ஒரு கூட்ட வர்ணம் பூசப்பட்ட கோமாளிகள் அல்ல. நீங்கள் அடைக்கப்பட்டுள்ள உங்களுடைய ஆமை ஓட்டை விட்டு வெளியேறி, பீடத்திற்கு வந்து, மற்ற பாவிகளைப் போல மனந்திரும்ப வேண்டும். ஆமென். அல்லேலூயா! ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! ஓ தேவனே! 59. எனக்கு புத்தி கோளாறு ஏற்பட்டுவிட்டது (beside myself) என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் அப்படி அல்ல. இங்குள்ள எத்தனை பேர் அப்படி ஒரு அனுபவத்தைப் பெற விரும்புகிறீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் ஒரு அனுபவத்தைப் பெற விரும்புகிறார்கள். இந்த பீடம் திறந்திருக்கிறது: நீங்கள் இங்கு வந்து என்னுடன் மண்டியிட அழைக்கப்படுகிறீர்கள். பிரசங்கிகளே, உங்களிடமுள்ள விறைப்புத்தன்மையை (starch) எடுத்துப்போட்டு, உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இங்கே வாருங்கள், நாம் சுற்றி முழங்காற்படியிடுவோம். ஒரு எழுப்புதலைப் பெறுவோம்; தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எல்லாம் சொல்லப்பட்டாயிற்று... முன்னே வாருங்கள்: "விருப்பமுள்ளவன் வந்து கர்த்தருடைய தண்ணீரின் ஊற்றுகளிலிருந்து இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன்.” அல்லேலூயா! பிரசங்கிகளே, இங்கே எழுந்து வந்து, பிரசங்கிகள் செய்ய வேண்டியதைப் போல இந்த பீடத்தில் முழங்காற்படியிடுங்கள். ஆமென். தேடுபவர்களே, முன்னே வாருங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் உங்களை அழைத்து, உங்களுடைய விசுவாசத்திற்கு சவால் விடுகிறேன். நீங்கள் ஒரு உண்மையான எழுப்புதலைக் காண விரும்பினால், அதை உங்களுடைய சொந்த ஆத்துமாவில் தொடங்குவீர்களாக. ஆமென். ஆமென். வாருங்கள், ஓ, பாவத்தினால் ஒடுக்கப்பட்ட உங்களுக்கு, கர்த்தரிடத்தில் இரக்கம் உண்டு. அவர் நிச்சயமாகவே தம்முடைய வார்த்தையை நம்பியிருப்பதன் மூலம் உங்களுக்கு கிருபை அளிப்பார். அதுதான் வழி. அந்தப் பழைய உடையையும், ஒரு ஜோடி பழைய குட்டையான கால்சட்டையையும் (britches) மறந்து விடுங்கள். நீங்கள் பருத்தி ஆடையை அணிந்திருக்க வேண்டும், பிரசங்கியாகிய நானும், சாதாரண மேலாடையை அணிந்திருக்க வேண்டும். அது சரி. ஆமென். 60. பீடத்திற்கு வரும் பாதையில் உங்களுக்கான வழியை உண்டாக்குவீர்களாக, முன்னே வாருங்கள். ஆமென். ஓ, அல்லேலூயா! என்றென்றும் தேவனைத் துதியுங்கள்! சுயம் உங்களில் மரித்தாக வேண்டும்! அல்லேலூயா. பிரசங்கிமார்களே; முன்னே வாருங்கள், இங்கே வாருங்கள். அல்லேலூயா. சகோதரர்களே, முன்னே வாருங்கள். "விருப்பமுள்ளவன் வந்து தண்ணீரின் ஊற்றுகளிலிருந்து இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன்." அங்கேயே உட்கார்ந்திருக்காதீர்கள், எழுந்திருந்து; தேவன் உங்களுடைய ஆத்துமாவில் எழுப்புதலை அனுப்பும் வரை அங்கேயே தரித்திருங்கள். ஓ, தேவனே, இரக்கமாயிரும் பிதாவே. பரலோகத்தின் தேவனிடமிருந்து...? உம்முடைய பரிசுத்த ஆவியை... கர்த்தராகிய இயேசுவே, இறங்கி வாரும், இந்த ஜனங்களை ஆசீர்வதித்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அவர்களுக்குத் தந்தருளும். தேவனுக்கு ஸ்தோத்திரம்...?.. கர்த்தராகிய தேவனே வாரும். இயேசுவின் நாமத்தினாலே, தேவனுடைய ஆவி விழும்படி நான் ஜெபிக்கிறேன். ஓ, தேவனே, விடுவிப்பீராக?... கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமை, இந்த ஜனங்களின் மத்தியில் விழுவதாக, கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு இருதயத்தையும் கட்டுக்குள் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்திலும் இயேசு கிறிஸ்து உருவாகுமளவும் ஜனங்கள் நடுவில் அக்கினியை அனுப்புவீராக. ஓ, தேவகுமாரனே, ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நன்மையான ஈவையும் தருபவரே, உமது ஆசீர்வாதங்களை இந்த ஜனங்களுக்கு அனுப்பும், கர்த்தாவே, தேவனுடைய வல்லமை அவர்களை உள்ளே கொண்டுவரட்டும். அல்லேலூயா. அல்லேலூயா. கர்த்தராகிய இயேசுவே இதை அருளும், ஓ, தேவனே...? ஓ, தேவனே, வாரும்...? எங்களை எடுத்துக்கொள்ளும். ஓ, இரக்கமுள்ள தேவனே! வாரும். இயேசுவே, இப்போதும் கர்த்தாவே, ஆசீர்வாதத்தை அனுப்பும்; கர்த்தராகிய இயேசுவே, உமது இந்த ஜனத்தின் மீது பரிசுத்த ஆவியை அனுப்பியருளும், கர்த்தாவே...?